திங்கள், 18 நவம்பர், 2013

வறுமையின் கொடுமை.


ிழித்திருப்பதுபோல்

பகல் பொழுது

உறங்கிக்கிடப்பதுபோல்

ஊரின் நிலப்பரப்பு

 

உணவுக்கு தவிப்பதுபோல்

ஒரு பிஞ்சு

ுடிவுக்குக் காத்திருப்பதுபோல்

ஒரு பருந்து

 

ோத்துக்கு ஏங்குதோ

இந்த உயிர்?

ோகத்தைத் தாங்காது

ேதனையில் சரியுதோ?

 

பசி தீர, மண்ணைதொட்டு

வணங்குதோ?-இல்லை

மண்ணோடு உறவாட

வரம் வேண்டுதோ?

 

நாத்துபோல நிமிர்ந்து

நிற்கும் வயசில

நாதியத்துக் கிடக்குதம்மா

உதவி ஏதுமில்லாம.

 

கோடை வெய்யில்போல்

கொதிக்குதம்மா என் நெஞ்சம்

வடியாத வெள்ளம்போல்

விழியெல்லாம் நீரம்மா.

 

உன்னை மறப்பதற்கு

என்னால முடியாது-நான்

செத்து மடிந்தாத்தான்

மறப்பதற்கு மாத்து வழி

 

பதினெட்டா இல்லை பதினாறா?


ெருக்கெடுத்து ஓடிவரும்

ாவிரி ஆற்றுக்கு

பதினெட்டாம் பெருக்கென

படைத்து வழிபடுவது

தமிழக பெண்களின் பாரம்பரியம்.

ற்றிய காவிரி, மண்ணாய் கிடக்க

ுழாய்த்தண்ணீர் கொண்டுவந்து

படைத்தது எதற்கு?

பதினெட்டா இல்லை பதினாறா?

 

ெண் சிசுக் கொலையைத்

தடுத்து நிறுத்தாமல்

ெத்தனமாய் இருந்ததினால்

சீரழிந்து போனதிந்த நாடு.

ஆண்பெண் எண்ணிக்கை

சரிசமமாயில்லாததால்

ஒவ்வொரு நாளும் கற்பழிப்பும்

பாலியல் கொடுமைகளும்

மலிந்து போனதுபோனதுபோல்

 

காவிரி நதியின் பகிர்வை

சுமூகமாய் தீர்க்காமல்

காலம் கடத்துவதால்

வருடங்கள் அதிகமில்லை

வந்துவிடும்

ஒரு குடம் தண்ணீருக்கு

விழப்போகும் கொலைகள்.

கடல் நீரில் உருவாகும்

சுனாமி பேரலைகள்-நாளை

தண்ணீருக்காகவும் எழலாம்

 

அரசியலாக்காமல்

உச்ச நீதிமன்ற பரிந்துரைபடி

செயல்படுத்த முனைவது

இல்லையேல் கங்கையைக்

காவிரியோடு இணைப்பது

அதுவரை

நாட்டு மக்களின் நலம் கருதி

காவிரி நீரை பகிர்ந்தளிப்பது

ஒரே நாடு ஒரே மக்கள்

என்பதால்.

 

 

 

 

 

 

வியாழன், 14 நவம்பர், 2013

அவனுக்கேது கவலை!


தான் தேய்ந்து

மனம் பரப்பும்

சந்தனமாய்

ஒருவகை

 

உணவின் அளவு

பால் தரும்

பசுவைப் போல்

ஒருவகை

 

உணவிட்டும்- தானாக

இறகு தராத

மயிலைப் போல்

ஒருவகை

 

தொல்லை தந்து

மகிழும்

தேளைப் போல்

ஒருவகை

 

வாழும் மாந்தரை

நான்கு

வகையாய்ப்

பிரித்தாலும்

 

எங்கு தேடியும்

இவ்வையகத்தில்

நல்லவன் ஒருவனைக்

காட்டமுடியுமோ?

 

ஆக்கல்

காத்தல்

அழித்தல்- என

அத்தனையும்

 

இறைவனின்

பொறுப்பென

நம்பியவர்களுக்கு

நல்லவனைக் காட்டாமல்

 

மௌனமாய்

ஆலயங்களில்

வீற்றிருக்கும்

அவனுக்கேது கவலை!

 

 

 

 

 

 

நிம்மதி கிடைக்காதோ?


ோம்பேறியாய் இருந்துகிட்டு

ும்மா சும்மா கவலப்பட்டு

உழைக்காம வாழ்ந்திருந்தா

வறுமைதான் போய்விடுமோ?

 

ெட்டித்தனமா சுத்திகிட்டு

ிக்கனத்தையும் விட்டுபுட்டு

ஊதாரியாய் வாழ்ந்திருந்தா

ஏழ்மைதான் போய்விடுமோ?

 

ின்னவீடு வச்சிகிட்டு

ாக்கு ருசியாய் தின்னுகிட்டு

மருந்தும் எடுக்காம வாழ்ந்திருந்தா

ோய் தான் போய்விடுமோ?

 

உற்றார் உறவோடு சண்டையிட்டு

எப்போதும் மனசில வச்சுகிட்டு

விட்டுக்கொடுக்காம வாழ்ந்திருந்தா

பகைமைதான் போய்விடுமோ?

 

அடுத்தவர் பொருள்மீது ஆசைபட்டு

மற்றவர் உயர்வதில் வேதனைப்பட்டு

நிறைமனமில்லாது வாழ்ந்திருந்தா

பொறாமைதான் போய்விடுமோ?

 

ஒற்றுமையாய் ஒன்றுபட்டு

ஓயாம உழைச்சுகிட்டு

நேர்மையாய் வாழ்ந்திருந்தா

வாழ்வில் நிம்மதிதான் கிடைக்காதோ?

 

 

முதல் தெய்வம்


அம்மா

உன் அன்பின் உயரத்தை

இமயம்கூட எட்டாது

கடலின் ஆழம் கூட

கணக்கிடப்படும்

உன் பாச அளவு

ார் கூறமுடியும்?

 

என் உடல்

ாடக்கண்டால்

உன் விழியில்

வழியும் கண்ணீர்

காட்டிவிடும்

உன் நெஞ்சின்

துயரம்

 

தத்தி நடந்து

தவறி விழும்போது

பதறித் துடித்துத்

தாவியணைக்கும்

அன்புள்ளம்

யாருக்குண்டு

உனையன்றி?

 

நான்

விழித்தபோதெல்லாம்

உன் அரவணைப்பை

நாடும் என் உயிர்

நீயோ

உறங்கும்போது கூட

உன் உயிர்

என் அரவணைப்பை

உறுதிசெய்யும்

என் மேலிருக்கும்

உன் கை

 

உயிர்களை

படைத்தவன் இறைவனென

நீ கற்பித்தாலும்

என்னை படைக்க

ஈசன் எதை இழந்தான்?

அன்னையே!

என்னை படைத்து

காத்து வளர்த்திட

எதை நீ

இழக்கவில்லை

சொல்லு தாயே?

 

தாயே!

எனை படைத்தாய்

ஊட்டி வளர்த்தாய்

அன்பு தந்தாய்

அம்மாவென

முதல் வார்த்தை

சொல்லவைத்தாய்

இத்தனையும்

தந்தத் தாயே

நீ தானே

நானறிந்த

முதல் தெய்வம்

 

மேகம் கருத்திடுச்சு


ோடிக் கிளிரெண்டு

ாடித் திரிந்ததிலே

ாதி மேகம் திரண்டுடிச்சு

இடியும் மின்னலும் எழுந்திடவே

கூடி தூரம் போயிடுச்சு

 

பறந்த கிளி திரும்பாம

ெத்த மனசு கேக்காம

கூண்டுக்குள் கொண்டுவர

ாய் விரித்த வலையில்

வந்தடைந்தபெண்கிளி

 

ொன்னதை சொல்லும் பச்சக்கிளி

பழக்கப்பட்டது சின்னக்கிளி

கீ கீ வென எழுப்பிய ஒலியில்

ேகாத்து வீச மேகம் கருத்திடுச்சு
ாவம் ஆண்கிளி செத்திடுச்சு