ஞாயிறு, 20 அக்டோபர், 2013

அசுர வளர்ச்சி


ிரபஞ்சம் படைத்த

ெரிய பூமிக்கு

வளர்ச்சியில்லை

 

பூமி படைத்த

ானிட இனத்துக்கு

ஆறடி வளர்ச்சி

 

மனிதன் படைத்த

செல்போன் இண்டர்னெட்டுக்கு

அசுர வளர்ச்சி

 

பிரபஞ்சம் சுருங்கியதுபோல்

ஒரு காட்சி

இதுவும் சுழற்சியோ!

 

தந்தி


ொந்தத்தின்

மரணத்த

இறந்தபின்

ுமந்து வரும்

எப்போதும்

தந்தி

 

தந்தியின் சாவை

ாவதற்குமுன்பே

ுந்தி தரும்

ெய்தியாய்

ண்டோரா

ோட்டு

 

வருத்தத்துடன்

ாளிதழில்

ெரிவிக்கிறார்கள்

ாட்டிலுள்ள

சொந்தங்களுக்கு.

 

பரம்பரையின் பாதிப்பு.


ச்சப் பூமாலை

ிக்கியது

இலங்கை கையில்

 

ிச்சு எறிந்த

பூமாலையாய்

மீன்பிடித் தொழில்

 

ாடிய பூக்களாய்

ாழ்விழந்த

மீனவர்கள்

 

மீனவர்களும் படகுகளும்

ாளும் சிறைபடும்

இராவண பூமியில்

 

ிறை பிடிப்பது

ுதிதல்ல

பரம்பரையின் பாதிப்பு!

எல்லோரும் ஊனம் தான்


ஒரு கண்ணை இழந்தவன்

கடவுளுக்கு நன்றி கூற

மறப்பதில்லை

ுருடனைக் காணும்போது

 

ால்வயிறு நிறைந்தவன்

கடவுளை வணங்காமல்

இருந்ததில்லை

பசியில் துடிப்பவனைக் காணும்போது

 

ெற்றி வேர்வை சிந்தியும்

வயிற்றுபசி தீராத

ாமரனும் பிறப்பால்

ஊனம் தானே!

 

ஊராரை ஏமாற்றி

ர்பணத்தில் திளைத்திடும்

எத்தர்களும் இழிசெயலால்

ஊனம் தானே!

 

இலஞ்சத்தில் உயிர்வாழும்

வஞ்சகக் கள்வர்களும்

நஞ்சானவர்கள்-அவர்களும்

மனதளவில் ஊனம் தானே!

 

ஊனத்தைக் கொடுத்து

உயிர்வாழ வழியில்லாதபோது

படைத்த இறைவனும்

படைத்தலில் ஊனம் தானே!

 

ஊனக் குறையுள்ளோரை

மாற்றுத்திறனாளிகளென

மாற்றியமைத்த

பாரதத் தேசத்தில்

 

வாழ்க்கை நம்பிக்கை

இரண்டையும் இழந்து நிற்கும்

அனைவரும் ஊனம் தான்

இறைவனையும் சேர்த்து.

 

 

 

 

அறுவடையாகிறது.


எப்போதும் முப்போகம்

ாணும் சோழவள நாடு

ெற்கதிரின் அறுவடைக்குக்

ாலமெல்லம் காத்திருந்து

வழியில்லாதபோது

மறக்காமல்

மனித உயிர் அறுவடையாகிறது

ாள்தோறும் அரசியலில்.

சனி, 19 அக்டோபர், 2013

சொல்லாமல் இருப்பேனோ?


ெத்தெடுத்த செல்வமெல்லாம்

சுத்தி நின்னு பார்க்கையில

வெட்டறிவா வீச்சால

வெட்டியென்னை சாயவச்சு

ஊருக்கு தூக்கிவந்து

பலபேரு முன்னால

வாசலில்ல கட்டிவச்சு

உயிரை எடுத்தவனை

வாயிருந்தால்-வாழை நான்

கத்தாமல் போவேனோ?

இல்லை பட்ட துயர்

சொல்லாமல் இருப்பேனோ?