ஞாயிறு, 4 ஜூன், 2017

மெய் மறந்தனர்



தாயைத் தேடி பிள்ளை
தவழ்ந்து செல்வதுபோல்
ஆறுகூட இப்போதெல்லாம்
அவசரமா ஓடி
கவலையேதும் கொள்ளாம
கடலை அடையும் ஆற்றுக்குக்
குறையின்னு தோனலையே!

வறுமையில் தவிக்கும் ஏழையின்
வாடிக்காயும்  வயிற்றை பற்றி
கொஞ்சமும் நினைக்காம
ஓடி ஒளியும் ஆற்றுக்கு
அக்கறை ஏது?
மனிதர்களே நினைத்து பார்க்க
மறந்தபோது

கடந்துபோன ஆறு
கரையை ஈரமாக்கி வளரவிட்ட
தாவரத்தின் பூக்கள்
தலைதூக்கி இதழ்விரிக்க
துணைக்கு வந்த இளந்தென்றல்
மனம் பரப்ப—மக்கள்
மெய் மறந்தனர் வேறு வழியின்றி!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக