சனி, 10 ஜூன், 2017

மரபும் மாண்டுபோனது.

அறிந்தது ஒரு வார்த்தை
அலறலும், கூவி அழைத்தலும்
அதனுள் தான்—நாங்கள்
அதிகம் பேசி
அடுத்தவர் மனதை
புண்படுத்துவதில்லை

அல்லலுறும் இனம்போல
அடிமையாய் வாழ்வதில்லை,
ஆதாயம் ஏதுமில்லாம
அடுத்தவர் வாரிசுக்கும்
எங்கள் குடிலில்
இடம் தந்து காத்திடுவோம்

திருமண வைபவத்திலும்
நிற வேற்றுமை
நாங்கள் பார்ப்பதில்லை,
பகிர்ந்து உண்ணுவது
பழமையானாலும்—எங்களுக்கது
பாரம்பரிய சொத்து

கிருஷ்ணனின் வண்ணத்தில்
காட்சி தருவோம் நாங்கள்
அதனால் தானோ
அவனின் தந்திரம்
எங்களிடமும் காணுதோ!
எதுவானாலும் உயிர்வாழத்தானே!

முன்பு விரதமிருந்து மக்கள்
பூசித்த உணவை
கூவியழைத்து எங்களுக்குக்
கொடுத்தபின் தான் உண்பார்கள்,
மூதாதையர்கள் மறைந்தார்கள்

மரபும் மாண்டுபோனது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக