வியாழன், 5 அக்டோபர், 2017

இதயத்தைத் தொடுகிறார்கள்



அலுவலகம் போகவேண்டி
அவசர அவசரமா கிளம்பி
ஆட்டோவை பிடித்து
போகிற வழியில்
தொழுகை முடித்து
போக எண்ணியவர்
பாட்ஷா என்னும் முகம்மதியர்

நிம்மதியாய் பயணித்தவர்
இறங்கும் இடமான
மசூதி வந்தபோது
மனத்தில் ஒரு பதற்றம்
பணத்தை எடுத்துவர
மறந்துபோனதால்
முகவாட்டம்

ஆட்டோக்காரரை
ஆண்டவராய் நினைத்து
மன்னிக்க வேண்டினார்,
மீண்டும் வீடு சென்று—பணத்தைக்
கொடுப்பதாகக்கூறி
தொழுகை முடியும்வரை
காத்திருக்க சொன்னார்

ஆட்டோக்காரரோ
அவசரமா போகவேண்டும்
காசைபற்றி
கவலைபடாதீர்கள்
காசு, பணம் பெரிசல்ல,
அமைதியாய் அல்லாவை
 தொழும்படி கூறி

போகும் முன் பாட்ஷாவிடம்
சிறு தொகை கொடுத்து
திரும்பி வீடுபோக உதவும்
என்று சொன்ன அந்த சாரதி
ஒரு இந்து மதத்தவர்,
இப்படியும் சில நல்லவர்கள்—நம்
இதயத்தைத் தொடுகிறார்கள்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக