திங்கள், 12 மார்ச், 2018

சாக்காடு குறையும்




தாயே, நீ வராமஉன்னைத்

தாங்கும் என்னை சிதைத்து

வறுமையில் வாடியதுபோல்

உருவத்தை கெடுத்தார்கள்



சூரியனும் உனக்கு

சொந்தம் என்பதால்

உன்னை பார்த்தால்

உள்ளம் குளிர்ந்திடுவான்



உலா வரும் நிலா கூட

உன் வரவை ஆவலோடு

தஞ்சையில் எதிர்பார்ப்பாள்

தன் எழில் உருவை உன்னில் காண



உன்னைக் கண்டால்

கூட்டமா வரும் யானைகள்

ஊருக்குள் வராதுஇனி

யாருக்கும் தீங்கிழைக்காது



உன்னால வளருவாள்

உன்னோட சிநேகிதிஉன்

வரவால் இனி உனக்கு

வண்ணம் சேர்ப்பாள்



துடித்து இறந்த மீன்கள்

துயரங்களை மறந்து

உனது வருகையால்

மீண்டும் பிறப்பெடுக்கும்



வழிதுணையாய் வந்துஉனக்கு

வழி காட்டி அழைத்து செல்பவனை

வெட்டி சிதைத்துபாவிகள்

விற்று கொழுத்தார்கள்



உன் தரிசனம் வேண்டி

ஊரே தெருவில் நின்று எழுப்பிய

கூக்குரலும், கலவரமும்இனி

காணாமல் போய் விடும்



உன் கருணையால் இனிமேல்

எப்போதும் முப்போகம்

 சாப்பாடு எல்லோருக்கும்இனிமேல்

சாக்காடு குறையும்








திங்கள், 5 மார்ச், 2018

இப்போது இருப்பார்களா?




காவிரி ஆறு ஓடி வந்து

காத்த காலமது

இரயில்வேயில் பணிபுரிந்த

இணையற்ற இரு நண்பர்கள்



பாஸ்கர் மூத்த அதிகாரி

பணி ஓய்வு பெற்றவர்,

இராகவன் அதிகாரியாக

இன்னும் தொடர்கிறார்



பாஸ்கர் மூத்த அதிகாரியாக

பணியாற்றிய போதுஇராகவனுக்கு

வழிகாட்டி, வாழ்வளித்து

உயர்வடையச் செய்தவர்



இன்றைய பதவி, பெருமை

அனைத்தும் அவரால் பெற்றதை

நினைக்க தவறாதவர்இராகவன்

நன்றி மறக்காதவர்



தனது மூத்த அதிகாரி பாஸ்கர்

திறமை, நேர்மையில் சிறந்தவர்இன்று

அவர் வறுமையில் வாடுவதை

அறிந்து அவரைக் காண சென்றார்



பணம் கொடுத்தால்

பெற்றுக்கொள்ள மறுப்பாரென

பொருட்களோடு, துணிமணிகள் ஏராளம்

கொண்டு சென்றார்



பாஸ்கரை பார்த்தார், பேசினார்

பின்பு பணிவோடு வேண்டினார்,

பொருட்களை மறுக்காமல் ஏற்கக்

கையெடுத்து கும்பிட்டார்




காத்து, கரையேற்றி விட்டவரை

காலம் பூரா நண்பர் மறப்பாரா?

இதுபோல நண்பர்கள்

இப்போது இருப்பார்களா?