சனி, 8 டிசம்பர், 2018

கையேந்துகிறது




வின்னையும், மண்ணையும்

இணைக்கும் மழைத்துளிகள்

பரிசுத்தமென

பறைசாற்றிக்கொண்டாலும்,

புகுந்த இடத்தால் தான்

பெருமையோ, சிறுமையோ

பெறுவதுபோல



கெடுக்க நினைக்கும் மாந்தரோடு

கூட்டு சேரும் மனிதர்களும்

கெட்டு போவதால்

கையூட்டு, ஊழல், திருட்டெல்லாம்

கை வந்த கலையாகி

கொலை, கொள்ளைகள்

கொடிகட்டி பறக்கின்றன



கும்கி யானை கொண்டு

காட்டு யானையை பிடித்தபோது

காட்டு யானை கேட்டது

தன் இனத்தைக் காட்டிக்கொடுப்பதும்

அடிமையாக்க உதவுவதும்

தவறு என்று தோனலையா?

தரம் தாழ்ந்து போகலாமோ! என்றது



வருத்தமுற்ற கும்கி யானை

வேதனையோடு சொன்னது

என்ன செய்ய?

மனிதர்களோடு சேர்ந்ததால்

காட்டிக் கொடுக்கும்

குணம் தனக்கும் வந்துவிட்டதென

குறைபட்டுக் கொண்டது


காட்டில் யானைகள்

கள்ளம், கபடு இல்லாமல்

சொந்தமாய் இரை தேடி

சுதந்திரமாய் திரிந்து வாழ்ந்தன

மனிதர்களிடம் சேர்ந்தபின் தான்

மானங்கெட்டு

காசுக்கும் கையேந்துகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக