படைத்தவளைப்
பார்த்திட
படைத்தவள் தந்த
பரிசோ-இல்லை
தன்னைக் காத்து
வாழ்ந்திட
இறைவன் தந்த புலனோ!
நல்லவனாய் வாழ்ந்திட
அறிவுறுத்தும்
ஆசானோ-இல்லை
துனையைக் காட்டி
மகிழ்ந்திட
வடித்தெடுத்த வட்ட
நிலவோ!
அழகுக் காட்சிகளை
மனதில்
அள்ளி சேர்க்கும் தென்றலோ-இல்லை
வார்த்தெடுத்த
உடலுக்கு
மெருகூட்டும்
கலைப்பொருளோ!
எண்ணத்தின் உணர்வுகளை
சிலையாய் மாற்றும்
சிற்பியோ-இல்லை
உழைத்து உயிர் வாழ
உதவும் கருவின்
முதற்கூறோ!
இத்தனை
சிறப்பிருந்தும்
மங்கையரின் கயல்
விழியோ
தூண்டிலிட்டு துடிக்க
வைக்கும்
ஆணின் இதயத்தை.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக