சனி, 19 ஜனவரி, 2019

எது சாத்தியம்? எது சத்தியம்?




மழையாய்ப் பொழியும்
மழை நீரெல்லாம்
பொறந்த வீடு நோக்கி
புறப்பட்டு போவதுபோல்
போய் சேரும் கடலுக்கு

பணக்கார்களின்
பெட்டியிலிருந்து
புறப்பட்ட பணமெல்லாம்
போட்டி போட்டுக்கொண்டு
புது வரவோடு போய் அமரும்

ஏழைகளிடம் எப்போதும்
இல்லாத குறைதான்கிடைக்கும்
அற்ப சொற்ப பணத்தில்
அன்றாட வாழ்க்கைக்கே
அல்லாடும் நிலை

மக்களைக் காக்க
மக்கள் நலனுக்காக
அரசியல் செய்ய வந்தவர்கள்
அசராமல் தங்கள் நலனில்
அக்கறை கொண்டார்கள்

கோடிகள் குவிவதைக்
கோடி காட்டும் ஊழலைக்
கொள்கையெனக் கொண்டார்கள்
பாவம் குடிமக்கள்
பசியால் வாடுகிறார்கள்

வறுமையில் வாடினாலும்
வேற்றுமை காட்டாதவர்கள்
ஒரு நாள் வயிறு நிறைவதற்கு
ஓட்டும் போட்டு மகிழ்வார்கள்
நன்றி மறக்காத மக்கள்

இந்தியா முன்னேற
இன்றியமையாத ஒன்று
வறுமை ஒழிப்பா?—இல்லை
ஊழல் ஒழிப்பா?
எது சாத்தியம்? எது சத்தியம்?


வியாழன், 10 ஜனவரி, 2019

எப்போதும் இன்பம் தான்


எதைப் பெற்றால்
எல்லாமும் கிடைக்கும்,
எதை இழந்தால்
அனைத்தும் போகுமென்று
அகம் எண்ணுகிறதோ
அதுதான் சமயம்

சமுதாய சிறப்புக்கு
சான்றாகத் திகழும்
சாதனை புரியும்,
இந்த சமயத்துக்கு
அடித்தளம்
அன்பு என்னும் கருணை

அனைத்து உயிர்களையும்
அன்போடு நேசித்து
அரவணைத்து காத்தால்
அனைவரும் தெய்வந்தான்
எல்லோரும் சொந்தந்தான்

எப்போதும் இன்பம் தான்