ஞாயிறு, 27 மே, 2018

உருவாகுதோ




தன்னோட பிள்ளை
தரணியில் உயர்ந்திட
நற்கல்வியும்,
நன்னடத்தையும் கற்றுதரநம்
முன்னோர்கள் பிள்ளைகளை
குருவிடம் ஒப்படைத்து
குருகுலத்தில் சேர்த்தனர்

குருவைத்தவிர எவரும்
உள்ளே வர இயலாத
குருகுலத்தில்
இடையூறு ஏதுமின்றி
அயராது கல்வி கற்று
ஒப்பில்லா சிறப்புடன்
உயரம் தொட்டார்கள்

ஆசிரியருக்கு தேவையான
அனைத்து பணிகளும், அன்று
படிக்கும் மாணவர்களுக்கு
பாடமானது--அதனை
அன்றாடம்செய்து முடிப்பதும்
அவர்களின் கடமையானது

தமிழகத்தில்  தற்போது
தேர்வுக்கு மாணவர்கள்
எட்டு திசை நோக்கி
எங்கெங்கோ போவது
கல்வியின் தரம் உயர
குருகுலம் மீண்டும்
உருவாகுதோ!

போற்றுவோம்




காலமெல்லாம் மனைவியாய்
கட்டுபட்டு வாழ
தொட்டு கட்டிய தாலி தானே
தொலையாத சாட்சி

பணிவிடை செய்யவும்
புருஷன்  இறந்தால்
உடன் கட்டை ஏறவும்
வழி வகுத்தது பழங்கால மனுநீதி

மனித சாதியைத்தவிர
மற்ற எந்த உயிரினமும்
பெண்ணினத்திற்கு இந்தளவு
பாதிப்பு தந்ததில்லை

பெண்கள் உடல் ரீதியா
பலவீனமானவர்கள்ஆனால்
அறிவில் சிறந்தவர்கள்
ஆண்களைவிட புத்திசாலிகள்

உடல்வலியைத் தாங்கும்
வல்லமை பெற்றவர்கள்,
நினைவாற்றலில்
சிறந்து விளங்குபவர்கள்

ஆயிரம் ஆண்டுகள் போராடி
இருநூறு ஆண்டுகளுக்கு முன்
உடன் கட்டை ஏறும்
வழக்கத்தை ஒழித்தார்கள்

பெண்களுக்கு இதெல்லாம்
எளிதில் கிடைத்ததல்ல
போராடி  பெற்றவை
போற்றுவோம்


வியாழன், 17 மே, 2018

உருமாறும்




கை பிடித்த
கணவனின் கைகளில்
கட்டுண்டு கிடக்கும்
காதல் மனைவிபோல
விரல்களில் அடங்கி
இதழ் பதிக்கும்
இன்பம் தரும்
மோகத்தில் சூடேற்றும்,
போதையில் மயங்க வைத்து
கள்வனைப்போல்நலத்தைக்
களவாடும்
சாம்பலாக உருமாறும்
சாவதற்கு வழிகாட்டும்
இந்த ஆறாவது விரலாட்டம்
அணையாத சிகரெட்டு


ஞாயிறு, 13 மே, 2018

நிறைவு தந்து மகிழவைக்கும்




இறைவன் தந்த உயிர்
அனைத்துக்கும் மேலானது
அதனினும் சிறந்தது
ஒழுக்கம்அது
ஒருவருக்கு உயர்வையும்,
பெருமையும் தரும்

நல்லது, கெட்டது அறிந்து
நன்னெறியில்
நடப்பதைக் குறிப்பது
ஒழுக்கம்இதனை
விதைப்பவர்
புகழை அறுவடை செய்வார்

இழக்கும் செல்வத்தை
மீண்டும் ஈட்டலாம்,
நலம் குன்றினாலும்
நாம் அதனைத் திரும்பப்பெறலாம்,
ஒழுக்கத்தை இழந்தால்புகழும்,
ஆன்மாவின் அழகும் நிலைக்காது

ஒழுக்கம் இல்லாதவனை
உலகம் மதிக்காது
ஒழுக்கம் உள்ளவனை
உலகம் உள்ளளவும் போற்றும்
நல்ல நட்பு தரும்மன
நிறைவு தந்து மகிழவைக்கும்


சனி, 12 மே, 2018

முடிவில் வந்து சேருமிடம்




இனிமையாய் வாழ
இயற்கை கொடுத்திருந்தும்
அதீத ஆசையால் சிலர்
அனைத்தையும் தனதாக்கி
சட்டத்தை மதிக்காமல்
சொந்தம் கொண்டாடுவோர்
முடிவில் எதனை எடுத்து செல்லவோ?
மரணமுற்ற போதும்
ஆறு அடி தான் சொந்தம்
அதுவும் நிரந்தரமல்ல

இருக்கும் இடத்தால் தான்
எதுவும் சிறப்புறும்
சட்டியில் இருந்தால் நீர்
சங்கிலே இருந்தால் தீர்த்தம்,
காலில் அணியும்
காலணியின் உரிய இடம்
வாசலுடன் சரி,
வீட்டிற்குள் அனுமதி இல்லை
அங்கிருக்கும் வரை தான்
அதற்கு மதிப்பு

முதலை நீரில் இருக்கும்போது
முந்திக்கொண்டு யானையை
மாய்த்துவிடும்,
கரையிலிருக்கும்போது யானை
காலால் மிதித்து முதலையைக்
கொன்று விடும்,
ஒருவருக்கும் சொந்தமில்லா இடம்
அரசனும், ஆண்டியும்
சரிசமாகும் இடம்
முடிவில் வந்து சேருமிடம்
மனித உடல் மாறுமிடம்

திருப்தி இன்பம்




அகந்தை கொண்டு
அநுதினமும்
இல்லையென்று சொல்லலாமோ!
பாவம் வந்து சேரும்
பல்லிகூடத் தங்காது

ஏமாற்றுவதும்இருந்தும்
இல்லை என்று கூறுவதும்
தன் நலத்திற்காக
தர்மத்தை அழிப்பதும்--என்றும்
தருமா அமைதியை?

கொடுத்து உயிரைக் காக்கும்
கருணையை விட
கண்டதுண்டோ பெரிய அறம்?
கொடுத்துபார்
திருப்பதி இன்பத்தை விட
திருப்தி இன்பம் உயர்வானது.



ஞாயிறு, 6 மே, 2018

நம்பினோர் கெடுவதில்லை




முடவன் கொம்புத்தேனுக்கு
ஆசை பட்டதுபோல
இரு கைகள், இரு கால்கள்
இல்லாத ஒரு பிரஞ்சுக்காரர்,
இங்கிலீஸ் கால்வாயை
நீந்திக் கடக்க விரும்பி
செயற்கைக் கால்களோடு
சாதனை புரிய துணிந்தார்

நாளும் கடும் பயிற்சி
நகர்ந்து போயின ஈராண்டுகள்,
விடாமுயற்சி வீண் போகாமல்
இங்கிலீஸ் கால்வாயை
ஈரேழு மணி பொழுதில்
கடந்து சாதனை படைத்தார்,
வாகை சூடிய பின்அவர்                                 
உதிர்த்த வார்த்தைகள்

நீந்தும் போது வலி இருந்தது
 இருந்தாலும்
 நீந்திக் கடப்பேன் என்ற
 நம்பிக்கை இருந்ததுஎன்றார்
ஊனம் பெரிதல்ல
வானம் பெரிது
அதனினும் பெரிது நம்பிக்கை
நம்பினோர் கெடுவதில்லை



சனி, 5 மே, 2018

நினைக்கும்




வானம் பார்த்த பூமியின்னு
வக்கனையா சொல்லி வச்சோம்,
வறுமையில வாடும்போது
வாராத சபையோர் போல
வானம் வந்து பார்க்கலையே
வேதனையை தீர்க்கலையே!

மாறாக

மக்களை காக்க எண்ணி
மேகங்கள் ஒன்றுகூடி
முடிவெடுத்து
மனமுவந்து மழை தந்து
மறுபிறவி கொடுத்த மாரியை
மனசு என்றும் நினைக்கும்

சுகமாய் வாழத்தானே!




இலவசம் போல் தருகின்ற
இரு நெல்லு மணிக்காக
கறைபட்ட மனிதர் போல
சிறைபட்ட  பச்சைக்கிளியின்
செயலெல்லாம் அடிமைத்தனம்,
எடுத்து கொடுக்கும் சீட்டில்
ஏதோ ஒரு மனிதனின்
ஏற்றத்தாழ்வுகளை
வெளிபடுத்தியதாக எண்ணிகிளி
பெருமை கொண்டாலும்

சிறகுகள் வெட்டப்பட்டு
சிறைபட்டதால்
சுதந்திரம் பறிபோனதும்,
பறக்க முடியாமல்
பாழும் மனம் பரிதவிக்க
இனத்தோடு சேர்ந்து வாழ
இயலாமல் போனதும்
விரும்பியதை உண்ண
வழியில்லாமலானதும்
சிறை படுத்தியவன்
சுகமாய் வாழத்தானே!