சனி, 12 டிசம்பர், 2020

வாழ்க்கை

 

ஊழி அழிந்தாலும்

ஊழல் அழியா தேசத்தில்

வலிமையான வறுமை மட்டும்

வந்தமரும் எப்போதும்ஏழைகளின்

வயிற்றிலடித்து உயிரை பறிக்க

வெட்டுப் பழி போல

வாட்டிக் கொல்லும்

 

படுக்க இடமில்லை

பசி போக்க வழியில்லை

பரிதவித்து நிற்கையிலே

பரிவட்டம் கட்டியவர்களும்

படைத்த பரமனும் கூட

கண்டு கொள்ளாதது

கானகம் புகுந்தார்களோ !

 

குடும்பங்கள் தெருவில் நிற்க

குடி புகுந்த ஆறுகள் எல்லாம்

கிடைத்ததை எடுத்து செல்ல

இருந்ததும் போனது,

என்ன எடுத்து வந்தோம், எடுத்து செல்ல ?

கானல் நீரைத்தேடி ஓடிய

கவரி மான் போலத்தான் வாழ்க்கை.

சனி, 28 நவம்பர், 2020

நல்லதல்ல.

 

மெய்யென்பதும்

நோய் என்பதும்

ஒருவரின் அந்தரங்க

உணர்வுகளோடு

ஒன்றுபட்டது

 

பாதிக்கப்பட்டவரே

பெரிது படுத்தாமல்

மறந்து போனபின்னும்

மீண்டும் மீண்டும்

பேசிக் கொண்டிருந்தால்

 

விடுபட்ட நோய் கூட

விடாமல் நினைவூட்டும்

சாகப்போகிறோமோவென்று

சந்தேகம் வந்துவிடும்மனதுக்கும்,

உடலுக்கும் நல்லதல்ல.

கை கொடுக்கும்

 

கை பிடித்து

அழைத்து செல்லும்

அன்னை போல

மரியாதை பார்க்காம

காலை பிடித்து

கூடவே நடந்து வரும் ,

நடக்கும்போது

காலைக் கடித்தாலும்

கற்பைக் காக்க

கை கொடுக்கும்


புதன், 11 நவம்பர், 2020

அது உலகமுமில்லை

 

பெண் என்பவள்

தெய்வத்திற்கு நிகரானவள்

படைத்தலும், காத்தலும்

பொதுவானது இருவருக்கும்

 

ஆணும், பெண்ணும்

முரண்பட்டு நிற்காமல்

சமன்பாட்டு நிலையில் இருப்பது

சாலச் சிறந்ததாகும்

 

ஆணும் , பெண்ணும்

ஒருவரை ஒருவர் புரிந்து

இணைந்து வாழ்ந்தால்

வாழ்க்கை வளம் பெறும்

 

பெண் இல்லாமல்

உலகமே இல்லை

பெண் இல்லாவிட்டால்

அது உலகமுமில்லை

 

வெள்ளி, 30 அக்டோபர், 2020

தலை எழுத்தா ?

 

இறைவனும் ,இயற்கையும்

இருப்பதோ ஒன்று போல

இருந்தும் நாட்டு நடப்பாட்டம்

வாழும் உயிர்களைக் காக்காம

ஒதுங்கி நின்று

ஒன்றை ஒன்று குறை கூறி

தப்பிக்க நினைப்பது

தரமானதா ? தவறானதா ? –இல்லை

தலை எழுத்தா ?

வெற்றி காணும்

 

நிலத்தில் விளைந்த

நெற்கதிர்கள்

முற்றியதும் தலை கவிழும்

மறக்காமல் மண்ணை நோக்கும்

அதுபோல

 

முதிர்வும், பக்குவமும் அடைந்த

மனிதரின் உள்ளம் என்றும்

அடக்கத்துடன் பணிந்து

அமைதியாய் காணும்

எளிமையாய் காட்சி தரும்

 

அன்போடு அடக்கமும்,

அச்சமின்மையும், சமூக நலனும்

இருக்கும் மனதில், நல்ல பண்பு

நிறைந்திருக்கும்அது

பணிவு தரும், வெற்றி காணும்

 

தங்காது

 

கஷ்டமும், நஷ்டமும்

மனிதனைத் திருத்தாதபோது

அறிவும், அடக்கமும் தங்காது

வியாழன், 15 அக்டோபர், 2020

சாமி சும்மா விடாது

 

சாதிகள் எப்போதும்

சமமாக அமராதிருந்தாலும்

சாதிக்க பிறந்ததுபோல்

சிம்மாசனம் ஏறும்

சாதித்துக் கொள்ளும்

 

சாமானிய மக்களைத் தான்

சாக்கடையில் தள்ளி

சாகசம் புரிவதற்கு

சாத்தானாக மாறும்

சன நாயகத்தை சீரழிக்கும்

 

சட்டத்தின் முன் எல்லோரும்

சமமென்று சொன்னாலும்

சரித்திரம்படைப்பதோ

சண்டியரும், அரசியலாரும் தான் ,

சமரசம் பேசுவதோ

சுடலையில் தான்

 

சோற்றுக்கு இல்லாம

சாகும் மக்களிடமா

சொல்லாதிக்கத்தைக் காட்டுவது !

சொன்னால் வெட்கம்

சொல்லாவிட்டால் துக்கம்

சாமி சும்மா விடாது.

நீ நல்லவனா ? கெட்டவனா ?

 

கொற்றவன் தந்த கொடை போல

கொரோனா தொற்றைக்

கொடுத்து உலகிலுள்ள மக்களைக்

கொன்று குவிக்கும் இறைவா !

கொடுக்காமலேயே நீ

ஒதுங்கி இருந்திருக்கக் கூடாதோ !

 

சாவைத் தடுப்பது போல் இறைவா

சாகசம் நீ புரிந்ததாய்க் காட்டி

சாகடித்த மக்கள் ஏராளம்,

சாகாத மக்களுக்கு பணி ஓய்வு தந்து

சம்பளமும் கொடுத்து ,சாகாமலேயே

சொர்க்கத்தைக் காண வைத்ததும்  உனது

சாதனை தானே !

 

தொப்புள் கொடி உறவு போல

தொற்றிய கொரோனா சுடுகாடு வரை

தொடர்ந்து வந்து உயிரை பறித்ததும் ,

தனி மனிதன் தன்னைக் காத்துக் கொள்ள

தனித்து இருத்தலும், முக் கவசம் அணிவதும்

தொடர் கதையாக்கி

 

மீதமுள்ள வாழும் மக்களை காத்து

மகிழ வைத்த மாயவனே !

மீண்டு வந்த மக்களின் பணிகளை

முடக்கி, வாழ்வாதாரத்தை பறித்ததால்

மரணத்தைத் தழுவும் நிலையிலுள்ள

மக்களுக்கு நரகத்தையும் காட்டிய

மாயவனே, நீ நல்லவனா ? கெட்டவனா ?

வெள்ளி, 9 அக்டோபர், 2020

வழி பிறக்கும்

 

முட்டையை உடைத்துக்கொண்டு

முழுமையாய் வெளி வரும்

ஆமை குட்டிகள் எவரின் தயவுமின்றி

ஆழ்கடல் நீரை நோக்கி தனித்தனியே

அடியெடுத்து வைக்கும்

அகிலத்தில் உயிர் வாழ-- அது

அறிந்து கொண்டது எப்படி ?

 

அன்னையின் அரவணைப்போ

ஆண்டவனின் பாதுகாப்போ

கற்றுகொண்ட அநுபவமோ

கல்வி கற்ற அறிவோ, ஏதுமில்லாம

ஒற்றையிலே நடந்து சென்று, நீரை

தொடும் , நீந்தி மகிழும்

யார் கொடுத்த வரம் ?

 

மண்ணில் பிறப்பெடுக்கும்

மானுடக் குழந்தைகளுக்கு

பூமியில் உயிர் வாழ

பெற்றவர்கள் உண்டு

பள்ளி ஆசிரியர்கள் உண்டு

பகவானும் உண்டு

அறிவுக்கு பஞ்சமில்லை

 

எல்லாமுமிருந்தும்

ஏன் இந்த அவல நிலை?

எங்கே குறையுள்ளது?

விதியென்று வாழ்வை வீணாக்காதே

உன்னையே முழுமையாய் நம்பு

துணிந்து செவ்வனே செயல் படு

துயரங்கள் விலகும்,வழி பிறக்கும்