சனி, 26 அக்டோபர், 2019

அந்த இருவரும்




ஒருவன் எருமை மாடு
என்று சொல்ல
அடுத்தவன் அதையே
இவனை பார்த்து சொல்ல
ஒரே வகுப்பில் படிக்கும்
இரு மாணவர்களுக்கிடையே
அடிபிடி சண்டை,
வகுப்பில் கூக்குரல்
வேதனையோடு
ஏனைய மாணவர்கள்

ஆசிரியர் கடுங்கோபத்தில்
அடக்கும் விதமாக
இருவரையும் பார்த்து
டேய் பசங்களா,
இங்கு நான் ஒருவன்
இருக்கிறேன் என்பதையே
மறந்து விட்டீர்களா?” என
அதட்டினார்,
அமைதியானார்கள்
அந்த இருவரும்.


இல்லாமல் போனது




ஆடு நின்றிருக்க
ஆட்டுக்குட்டி பால் குடிக்க
தவழும் குழந்தை பார்க்க
தரையில் படுத்து இரசிக்க
புரியாம சிரிக்குதா ?—இல்லை
பாலுக்கு ஏங்குதா?

இறைவன் வந்து நிற்க
இந்த நிலை கண்டிருக்க
ஆச்சரியப்பட்டாலும்—அவனும்
உதவாமல் போனதற்கு
வெட்கப்பட்டான்
வருந்தி மறைந்து போனான்

சாதிக்க வந்ததுபோல்
சாதனை புரியும் சூரியன்,
சாலையோர நிழலில்
சாகக்கிடப்பதுபோல் ஒரு பாட்டி
காசுக்குக் கையேந்தி
கவணிக்க ஆளின்றி கிடக்குதே

பிள்ளைகளின் செயல்களால்
புலம்பி அழும் பாட்டி,
நீங்கள் இருக்கக் கருவறை ஒன்று
இருந்தது என் வயிற்றில்—நானிருக்க
ஒரு இருட்டறை கூடவா
உங்களிடம் இல்லாமல் போனது?

சனி, 19 அக்டோபர், 2019

அறமெனக் கொண்டார்கள்


மனத்தை புண்படுத்தும்
முள்ளுச் செடி,,கொடிகள்
தானா வளரும் தாவரங்கள்,
திராட்சை, தென்னை போன்றவை
தானாக வளராது
வளர்த்தால் வளரும்
வாழவைத்தோருக்கு உணவு தரும்

தீய குணங்களும் அதுபோல
தானா வந்து சேரும்
தீயைப்போல அழித்துவிடும்,
நல்ல குணங்களை பேணி
நாம தான் வளர்த்து காக்கனும்,
கோபம் தானா வரும்ஆனால்
பொறுமையை நாம தான் வளர்க்கனும்

நல்ல குணங்களென்பது
நாலு பேருக்கு உதவுவது,
அன்பு, கருணை காட்டுவது
இனிமையாக பேசுவதுமாகும்,
கெட்ட குணங்கள் என்பதுபிறரைக்
கெடுப்பது, கோபம் கொள்வது
கொலையும் செய்வதாகும்

பண்டைய சான்றோர்கள்
பட்டு அநுபவித்த அறிவால்
நல்லது, கெட்டது எதுவென
நமக்கு சொல்லிவைத்தார்கள்,
ஒட்டுமொத்த நல்ல குணத்திற்கு

நேர்மை என பெயரிட்டுஅதனை

அறியாத ஒற்றுமைகள்




கந்தப் பெருமானின் வாகனம்
கானகத்து மயிலாகும்
அதன் காலடியில் ஒரு
அரவம் கண்டேன்,
அதுபோல அவனது தந்தை
சிவப்பெருமானின் கழுத்திலும்
ஸர்ப்பம் ஒன்று கண்டேன்

அமுதத்தை பிறருக்கு தந்து
ஆலகால விஷமருந்திய
சிவப்பெருமானின் கழுத்தில்
நீல நிறம் கண்டேன்,
சிறகை விரித்தாடும்
அழகு மயிலின் கழுத்திலும்
நீல வண்ணம் கண்டேன்

பறவை இன மயிலுக்கு
படைத்தவன் அருளிய வரம்
பின்புறத் தோகை
ஒளி வட்டம்போலக் கண்டேன்,
ஓம் எனும் மந்திர வார்த்தை
ஒளி வட்டமாக சிவனிடம்
அமையக் கண்டேன்

கைலையில் சிவபெருமான்
காலைத்தூக்கி நடனம்
ஆடக் கண்டேன் ,
அதுபோல தோகை விரித்து
அழகு மயிலும் ஆடக் கண்டேன்
அனைத்தும் அற்புதங்கள்
அறியாத ஒற்றுமைகள்


சனி, 12 அக்டோபர், 2019

வறுமையை ஒழிப்பதற்கு




அனைத்து மக்களும்
அமைதியாய் இளைப்பாற- இயற்கை
இரவையும், பகலையும் தந்தது
இரவு பகல் என்பது
இன்பம் , துன்பம் போல்
மாறி ,மாறி வருவது

உலகுக்கு ஒளி தர
ஒருவனுண்டு
அவனை ஆதவன் என்பார்கள்
அதுபோல
இருளுக்கு எவன் உண்டு ,
இல்லாமலா

இரவுக்கு துணையாக
இருப்பவர்கள் திருடர்களும்
கொள்ளையர்களும் தான்
கரப்பான் பூச்சி , ஆந்தையைப்போல
இருளில் தனக்கு வேண்டி
திரிபவர்கள்

துன்பத்தை நினைத்துத்
துயரம் கொள்ளாமல்
ஆதவனைப்போல
ஒருவனைத் தேடி பிடியுங்கள்
வாழும் மக்களின்
வறுமையை ஒழிப்பதற்கு

சனி, 5 அக்டோபர், 2019

இயற்கை அருளியது




உங்கள் இதயத்தின் இயக்கம்
உள்ளவரை இரக்கம்
நிலைத்திருக்கட்டும் ,
இரக்கமும், கைகளில் பலமும்
இருப்பதால் தான்
புவி வாழ் ஜீவனெல்லாம்
உயிர் வாழ்கின்றன

கோயிலுக்குக் கொடுப்பதைக்
குறை கூறவில்லை
அதைப்போல
இல்லாத ஏழைகளிடமும்
இரக்கம் காட்டுங்கள்அது
நம்மையும் இறைவனுக்கு
நிகராக வைக்கும்

ஆன்மாவின் பெருந்தன்மை ,
காட்டும் இரக்கத்தின்
அளவைப் பொருத்தே
அமைகிறதுபிறருக்கு
இரக்கம் காட்டுங்கள்
இறைவனின் இரக்கத்தை
நீங்கள் பெறுவீர்கள்

வன விலங்குகள் கூட
வேற்று இன குட்டிகளைக்
கொன்று தின்னாமல்
கருணை காட்டும் ,
பசித்தாலும் புசிக்காது
இரக்கக் குணம் உயிர்களுக்கு
இயற்கை அருளியது

வறுமையா ? வக்கிரமா ?




சூரியன் வெளிச்சத்திற்கு
மூலமாவதுபோல்
செல்வம் வாழ்வதற்கு
மூலமாகும்

இருளுக்கு மூலமில்லை
அதுபோல , செல்வம்
இல்லாதவருக்கு
இப்புவியில் வாழ்வுமில்லை

பெற்ற அன்னைக்கு
பிள்ளைகள் நால்வருண்டு
இருந்தும் ஒன்றுபோல
ஒருவரும் உதவாமல்

செத்த பிணம்போல
சமூகத்துக்கும் அஞ்சாம
வீதியில விட்டது
வறுமையா ?  வக்கிரமா ?