சனி, 22 ஜூன், 2019

பூக்களின் அரசி





உருவத்தை வைத்து
யாரையும் எடை போடக்கூடா து,
பல சமயங்களில்
எளிதாக முடிவெடுத்து
ஏமாந்து போவதோடு
இன்னலுக்கும் ஆளாவதுண்டு

முருகப்பெருமானை
பால்மனம் மாறாத
பாலகனென எண்ணியதால்
சூரபத்மன் தன் இறுதி முடிவை
சந்தித்தான்

கூனியை எளியவளென
இராமன் நினைத்து
மண்ணுருண்டையால்கூனியின்
முதுகில் அடித்ததால்
இராமன் பட்ட துயர்
இராமாயனத்தில்  அறியலாம்

பெரிய தேராக இருந்தாலும்
சிறு கடையாணி ஒன்று
கழன்றால் தேரே விழுந்து
கடவுளும் விழ நேரும்
மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும்

வாழ்வில் அற்பம் என்று
நாம் நினைப்பவை யாவும்
அற்பங்கள் அல்ல
சமுதாயத்தில் எல்லோரும்
சிறப்பானவர்களே

திருமகளும், கலைமகளும்
விரும்பி வசிக்கும் இல்லம் தாமரைப்பூ
அது சேற்றில் பிறந்தாலும்
அதன் மணத்தாலும், நிறத்தாலும்
பூக்களின் அரசியென போற்றப்படும்


கீர்த்தி பெரியது




துன்பங்கள்  ஆயிரம்
தொடர்ந்து வந்தாலும்
கடைபிடித்தல் என்றால்
கடைசி வரை விடாமல்
பிடித்திருப்பது என்பது
பொருளாகும்

இடையூறுகளும்,சோதனைகளும்
அணிவகுத்து நின்றாலும்
நன்மையென்று எண்ணிய
நல்ல செயல்களை விடாது
செய்துகொண்டு இருப்பவர்கள்
என்றும் தோற்பதில்லை

நல்லதெனத் தெரிந்ததனை
நலிவுற்று சிதையாமல்
மாற்றிக்கொள்ளாத
மன உறுதி தான்
அரிச்சந்திரனை இழந்தும்
சத்தியம் பேச வைத்தது

நன்மை கடைபிடி எனும்
ஒளவையின் வாசகம்
சிறியது தான்ஆனால்
வரம்பற்ற பொருள் கொண்டது
மூர்த்தி சிறியது தான்
கீர்த்தி பெரியது

சனி, 15 ஜூன், 2019

மண்ணுக்குள் வாசம்




சமுதாயத்தில் எழுகின்ற
சிக்கல்கள்  பலவற்றுக்கும்
சமுதாயத்தில் காணும்
ஏற்றத்தாழ்வுகள் தான்
எல்லாவற்றுக்கும் காரணம்

மக்கட்தொகையும்
மனிதத் தேவைகளும்
பெருகி வருவதால்,
நேர்மையான வழியில்
பொருளீட்டி வாழமுடியாமல்--சிலர்
மாற்று வழி தேடுகிறார்கள்

எப்படியும் வாழலாம்
என்ற நிலைக்கு வந்து
வாழ்க்கையை போராட்டமாக்கி
வாழத் துணிகிறார்கள்
வேறு வழியின்றி

பவனி வரும் இறைவனை
பலபேர் சுமப்பதுபோல்
உயிரில்லா உடலுக்கு
உறவுகள் தோள் கொடுக்கும்,
வழிகாட்டும்,--முடிவில்
மண்ணுக்குள்  வாசம்



நடந்தே சென்றிருக்கிறார்




புண்ணிய பூமியான
பாலஸ்தினத்திற்கு
ஆங்கிலேயர் ஒருவர்
சுற்றி பார்க்க
சென்றார்

கலிலேயாக் கடலில்
படகில் செல்ல விரும்பி
படகோட்டியிடம்
எவ்வளவு கட்டணம்?
என்று கேட்டார்

படகோட்டி
பத்து ஷில்லிங் என்றார்,
ஆங்கிலேயரோ
எங்க ஊரில் வெறும்
ஏழு பென்ஸ் என்றார்

அதற்கு படகோட்டி
அது உங்களூரையா,
இது கலிலேயாக் கடல்
இயேசு கிறிஸ்து நடந்த
கடலய்யா என்றார்

ஆங்கிலேயர் அதற்கு
அநியாய படகு கட்டணத்தால்
அந்த ஏழை இயேசு
எப்படி கொடுப்பார்?
அதனால் தான் கடல்மேல்
நடந்தே சென்ருக்கிறார்.


சனி, 8 ஜூன், 2019

கூர்மை படுத்தும்




நண்பர்கள் இருவர்
நடை பயணம் போகையில,
புகையிலைச் செடியை
நுகர்ந்து பார்த்த கழுதை ஒன்று
முகத்தைத் திருப்பிக் கொண்டு
நின்றதைக் கண்ட
நண்பன் சொன்னான்
புகையிலை கழுதைக்குக் கூட
  பிடிக்கவில்லையே!”

அடுத்த நண்பன்
அவனது புகையிலை பழக்கத்தை
கிண்டல் செய்வதாகக் கருதி
சிரித்துக்கொண்டே சொன்னான்
கழுதைகள் புகையிலையை
  எப்போதும் விரும்பாது
 அர்த்தத்தை உணர்ந்த நண்பர்கள்
இருவரும் அகமகிழ்ந்தனர்
அறிவாற்றலை
அறிவுதான் கூர்மை படுத்தும்


சனி, 1 ஜூன், 2019

,மறக்காமல் உதவுகிறதோ !




பவனி வரும் இறைவனை
பலபேர் சுமப்பதுபோல்
உயிரிழந்த உடலுக்கு வழிகாட்ட
உறவுகள் தோள் கொடுக்கும்,
இறுதி யாத்திரையில் அதற்கு
இருக்க இடம் கிடைக்கும்,
முடிவில் மண்ணுக்குள் புதைத்து
மூடி மறைக்கப்படும்,
இறைவனடி சேர்ந்ததாய்
அது முழுமை பெறும்,
ஒரு மனித உயிரின்
வரலாறு முடிவடையும்

புதைக்கப்பட்ட சடலம்
பூமாதேவிக்கு
பூஜை செய்வதாயெண்ணி
உயிரோடு வாழ்ந்தபோது
தூக்கி வளர்த்தத்   தாயைப்போல
தூக்கி சுமந்த பூமி அன்னையை
தானும் இப்போது சுமப்பது
நன்றி மறவாத
நற்செயல் என்பதால் தான்
மண்ணும் மாந்தருக்கு
மறக்காமல் உதவுகிறதோ!



யாரும் வருவதில்லை



குறுக்கு வழியில்
கிடைக்கும் செல்வத்தை
அடுத்தவர்க்கும் கொடுத்துதவி
அகம் மகிழாம,
தன்னால் கிடைத் ததென
தானே பயனுற நினைப்பவன்
படைப்பின் நோக்கத்தை
பாழ்படுத்தும் பாவி அவன்

ஆறு,மரம் போன்றவை
அனைவருக்கும் உதவுவதுபோல்
தன்னிடம் மிகுந்திருக்கும்
தனம், பொருள், கல்வி,
ஞானம் எதுவானாலும்
பிறருக்கும் கொடுத்து உதவுவது
பெருமைக்குரியது,
பாராட்டத்தக்கது

பிறருக்குக் கொடுக்காமல்
பூட்டிவைக்கும் செல்வத்தால்
நிம்மதி பறிபோகும்,
நீ இறந்த பின்னே
உன்னோட கூட வருமா?—இல்லை
உனக்கு பெருமை  சேர்க்குமா?,
உதவியேதும்  செய்யாதவனுக்கு
உதவிட யாரும் வருவதில்லை