வெள்ளி, 29 மே, 2020

முடிந்து போனது.




உண்ண உணவும், இருக்க இடமும்,
குடிக்க நீரும், உடுக்க ஆடையும்
அனைத்து மக்களுக்கும் கிடைக்க
ஆவண செய்ய வழி தேடும்
அரசியல் கட்சிக்கு தான் எல்லோரும்
ஆசைபட்டார்கள்

தேர்தல் வரும்போதெல்லாம்
சேர்ந்து வந்து தோள் கொடுக்கும்
செல்வம், நேர்மையானவனின்
வெற்றியை பறித்துவிடும்,
முக்கியமான மக்கள் நலன் அதோடு
மரணமுற்று முடிந்து போகும்

இருவேறு கட்சிகள் கூட
அன்றைய அரசியலில்
இணைந்து செயல்பட்டார்கள்
மக்கள் நலனுக்காகஆனால்
இன்றைய அரசியலோ மக்கள் நலனே
இல்லாமல் ஆக்கிவிட்டது

இன்றைய அரசியலை முதலீடு
இல்லாம ,லாபம் தரும் தொழிலாக
மாற்றி விட்டார்கள்
அன்றைய அரசியல் மக்கள் நலனில்
அக்கறை காட்டிய நல் அரசியல்,
அது நாட்டின் சுதந்திரத்தோடு
முடிந்து போனது



வியாழன், 28 மே, 2020

இன்னொரு பரிமாணம்




செயல்களை நிறைவேற்ற

கருவிகள் மட்டும் போதாது
மனத்தின்மையும் வேண்டும்,
அறுக்க மாட்டாதவன் கையில்
அரிவாள் இருந்தும் என்ன பயன்?

இராட்டை, அஹிம்சை
இரண்டின் துணை கொண்டு
வெற்றி கண்ட மாமனிதர்
மகாத்மா காந்திஅவருக்கு
புல்லும் ஆயுதம் தான்

எங்களைக் கேட்டு தான் சூரியனே
எழும்,விழும் என்று சொன்னதும்,
அரை நிர்வாண பக்கிரி என்று காந்தியை
அழைத்ததும் ஆங்கிலேயர்கள் தானே!
காந்தியை வெல்லமுடியாமல்
வெட்கப்பட்டவர்களும் அவர்களே!

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
என்னும் பழமொழி மகாத்மாவால்
அகிம்சையெனும் பெருநெறியின்
ஆற்றலால்  அதன் இன்னொரு
பரிமானத்தையும்பெற்று நிற்கிறது


வலி தந்த வரிகள்


பொற்கொல்லன்

சொன்ன வார்த்தைகளை

ஆராய்ந்து பாராமல்

அப்படியே ஏற்று

கோவலனைக்

கொன்றான்

பாண்டிய மன்னன்,

முடிவில் மன்னனும் இறந்தான்,

மதுரையும் எறிந்தது போல்

 

நேர்மையானவனென்று

பேரெடுத்த இராமன்

வாலியை அழைத்து

விசாரிக்காமல்

அநுமன் கூறியதை

அப்படியே ஏற்று

வாலியைக் கொன்றது

இராமாயணக் காதைக்கு

வலி தந்த வரிகள்


வியாழன், 21 மே, 2020

தமிழகத்தில் நடக்கலாமா !




பசியின் கொடுமையால்
புலம் பெயர்ந்த ஏழைகள்
பிற மொழி பேசும்
பாரதத்தின் குடி மக்கள்,
குடும்ப சூழ்நிலையால்
கூலித் தொழிலாளி ஆனார்கள்,
தனியார்  நிறுவனத்தில் பணி--அதுவும்
தண்ணீருக்கு தவிக்கும் ஊரில்

காலம் கடக்கும்போது
கொப்புக்குக் கொப்பு தாவும்
குரங்கு போல
கொரோனா தொற்று நோய்
தொற்றி, ஊரை சீரழித்ததால்—இவர்களின்
பொற்காலம் பறிபோனது,
வேலை, வீடு, வருமானம் இழந்து
வீதியில் நிற்கும் அவலம்

அவதியுறும் அங்குள்ள மக்களுக்கு
அள்ளிக் கொடுத்து உதவிய
அரசும், கட்சிகளும் மற்றும்
உதவிக்கரம் நீட்டியவர்களும்
அந்த ஏழைகளுக்கு எதுவும் தரலையே,
அந்நியன் என்பதாலா ?—இல்லை
ஆதாயம் ஏதுமில்லை என்பதாலா ?
வந்தாரை வாழவைத்தத்
தமிழகத்தில் இப்படி நடக்கலாமா ?

தாலி





மறந்து போயும்
அறுந்து விடாதே,
பெண்மையை விட்டு
பிரிந்து போவது
நீ மட்டுமல்ல
பூவும், பொட்டும்
உடன் கட்டை ஏறும்,
கட்டிய கணவன்
பூட்டிய வளையல்
எல்லாமும்
இல்லாமல் போகும்

பாவத்துக்கு அஞ்சும்





பாறையில் நீர் சுரக்கும்
பாறை நெஞ்சில்
பாசத்தையும், இரக்கத்தையும்
பார்க்கமுடியுமா?

மென்மையான பஞ்சு
நெருப்பில் அழிந்தாலும்
பஞ்சு போன்ற நெஞ்சம்
பாவத்துக்கு அஞ்சும்


சனி, 16 மே, 2020

நிற்காதா !





தவித்த வாய்க்கே
தண்ணீர் இல்லாதபோது
நாளை அஸ்தியைக் கரைக்க
நதிகள் இணையாதா ?
தண்ணீர் பஞ்சம் தீராதா?
பங்காளிகள் பங்கு அளித்தால்
சரித்திரம் உருவாக
சாத்தியமாகாதோ !

நதிகள் உண்டு
பல வழிகள் உண்டு
அரசியல் கழிவுகளைக்
கொட்டிக் குறுக்கே
தடுக்காதிருந்தால்
தண்ணீர் வராதா ?—இல்லை
எங்கள் கண்ணீர் தான்
நிற்காதா?

அழிந்தான்




கலைகளையும்,
வேதங்களையும்
கற்று தேர்ந்த
வேந்தன்

உடல் வலிமையும்
போரிடும் திறமையும்
பெற்றவன்பிறரை
வியக்க வத்தவன்

இவன் இலங்கைக்கு
வேந்தன்
இராமாயணத்தில்
வில்லன்

அறிவின் அளவு
அவன் பெற்ற
தலைகள் போல்
அதிகம்

பெரும் கப்பலைக்
கவிழ்க்க
சிறு துளை போதும்
என்பது போல்

இத்தனை இருந்தும்
காமம் என்ற
பலவீனத்தால்
அழிந்தான்




கருணை தானே !





வற்றாத காவிரி
வழி மாறி போனதால்,
வணங்கும் தெய்வம்
வேறு வழி காட்டுவானென
விதைத்த உழவன்

விடியாதா என
வேதனையோடு
வானத்தையே பார்த்திருக்க,
வஞ்சித்த இறைவனை
வசை பாடும் உழவன்

பருவத்து மேகம்
கறுத்து காணும்போது
கால் பதிக்கும் நம்பிக்கை
மனதில் துளிர் விடுவதும்
மண்ணின் கருணை தானே !

சனி, 9 மே, 2020

தெரியவில்லை.





கண்ணில் ஒரு தூசு
காணாமல் போனது உலகம்,
அறிவில் எனக்கு  வெற்றிடம்
அகிலத்திலுள்ளோர்க்கு
என்னையே தெரியவில்லை

விடியாமலா போய்விடும்



செக்கு மாடு போல
சுத்தி சுத்தி வந்து
நாளெல்லாம் உழைத்தாலும்
சுத்தி வந்த மாடு போல
சுகமா இல்லையடி மனசு

செல்வம் இருப்பவரும்
சேர்க்கத்தான் துடிக்கிறார்கள்,
உழைப்புக்கு ஏத்த
ஊதியம் இல்லைன்னா
வயித்துக்கு வழி ஏது ?

நாடு முன்னேறுவதா
நாளெல்லாம் பேச்சு
நம்பிக்கை வைப்போம்
நாளை விடியாமலா

போய் விடும்?