செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

இராமாயணக்காதை.


சந்தன வாடை

சுமந்து வரும்

இளந்தென்றல்

நந்தவனப் பூவிதழில்

நர்த்தனமாடி வர

 

கானக் கருங்குயில்

குரலெழுப்பி

கானம் இசைக்கக்

கேட்டு மானினம்

ஓடி மகிழ்ந்தாட

 

திங்கள் முகம் கொண்ட

தங்கச் சிலையழகி

சீதையவள்

புள்ளிமான் வேண்டி

இராமனிடம் கேட்டிட

 

மானைத் தேடி-இராமன்

கற்குகை புகுந்ததால்

வெளியில் வந்தது

அகிலம் போற்றும்

இராமாயணக் காதை.

 

 

பொல்லாத வறுமை


இல்லாத மக்களுக்கு

எப்போதும் துணையிருக்கும்

தன்னோடு சேர்ந்திருந்தால்

கண்மூடி உறங்கவைக்கும்

 

விரட்டுவதாய்க்கூறி

வீதியெங்கும் முழக்கமிட்டு

உச்சம் தொட்ட தலைவருக்கு

அளவில்லா செல்வம் தரும்

 

எடுத்துக்கூறி, திருத்துவதுபோல்

நடித்துக் காட்டி

மகிழவைக்கும் நடிகருக்கு

பாலாபிஷேகம் செய்துவைக்கும்

 

துடைத்து ஒழிக்க எண்ணி

படைக்கும் கவிதைகளால்

மக்களை விழித்தெழ செய்யும்

கவிஞருக்கு புகழை வழங்கும்

 

ஏனோ

ஏழைக்குமட்டும் எப்போதும்

மஹாபாரதக் கர்ணனைப்போல்

தன்னையே தாரைவார்க்கும்

பொல்லாத வறுமை!

இறைவன் கூட அழுதிடுவான்


விடியலுக்குக் காத்திருந்து

விடியாமல் போன அந்த

பொழுதின் வேதனையை

வாழும் நினைவுகள்

நாளும் கண்ணீராய்

விழியில் தோன்றி

வீழ்ந்து சாகும்

 

ஓலக்குடிசையில ஒருத்தி

உணர்வுகளை ஒதுக்கிவச்சு

றெக்கை யிழந்த

பறவை போல

அமைதியற்று வாழும்

முதிர் கன்னியின் சோகம்

தீருவதெக்காலம்?

 

வரப்புயர்த்தி,

வாய்க்காய் வெட்டி

ஏர் உழுது, விதைவிதைத்து

கருமேகம் இறங்காம

நீருக்குக் காத்திருக்கும்

திருவாரூர் உழவனின் துயர்

துடைப்பதெக்காலம்?

 

சாகும் நிலையில்

ஓடும் வாகனங்கள்

விதி முடிந்ததுபோல்

வழியில் கிடக்கும் வீதிகள்

சாலையைக் கடக்கும் மாந்தர்கள்

இரத்தம் சிந்தி நடுத்தெருவில்.

மாறுவதெக்காலம்?.

 

ஆழ் துளையிட்டு-அதை

மூடாமல் விட்டுவைத்து

விதைபோல இருந்தவளை

விதைப்பதுபோல விழவைத்து

அள்ளியெடுத்து

மண்ணள்ளிப் போட்டீரே!

திருந்துவதெக்காலம்?

 

ஏது குறையால

இவையெல்லாம் தெரிவதில்லை?

நெஞ்சின் வேதனையை

நினைத்தாலே நஞ்சாகும்.

மக்களின் இன்னல்களை

இறக்காமல் போனாலோ

இறைவன் கூட அழுதிடுவான்!.

 

கருவின் முதற்கூறு


படைத்தவளைப் பார்த்திட

படைத்தவள் தந்த பரிசோ-இல்லை

தன்னைக் காத்து வாழ்ந்திட

இறைவன் தந்த புலனோ!

 

நல்லவனாய் வாழ்ந்திட

அறிவுறுத்தும் ஆசானோ-இல்லை

துனையைக் காட்டி மகிழ்ந்திட

வடித்தெடுத்த வட்ட நிலவோ!

 

அழகுக் காட்சிகளை மனதில்

அள்ளி சேர்க்கும் தென்றலோ-இல்லை

வார்த்தெடுத்த உடலுக்கு

மெருகூட்டும் கலைப்பொருளோ!

 

எண்ணத்தின் உணர்வுகளை

சிலையாய் மாற்றும் சிற்பியோ-இல்லை

உழைத்து உயிர் வாழ

உதவும் கருவின் முதற்கூறோ!

 

இத்தனை சிறப்பிருந்தும்

மங்கையரின் கயல் விழியோ

தூண்டிலிட்டு துடிக்க வைக்கும்

ஆணின் இதயத்தை.!

 

கண்ணதாசன்


அமுதசுரபியே!  அற்புதக் கவிஞனே!

உன் கற்பனை கலை நயத்தால்

எங்கள் இதயங்களைக் கட்டிபோட்ட

மாமேதையே!  வியத்தகு சிற்பியே!

தெளிந்த நீரோடையாய் உன் கவிதை வரிகள்

இயற்கை, காதல், தத்துவம், சோகமென

உன் பேனா தொட்ட வார்த்தையெல்லாம்

கனி தரும் விருட்சங்களாய் படைத்த

காவியத் தாயின் இளையமகன்!!

சிறுகூடல் பட்டிக்கு பெருமை சேர்த்த

முத்தையாவெனும் கண்ணதாசன்!

 

தமிழ் இலக்கியத்துக்கு ஒரு முத்து

அவர் தமிழ் மக்களின் சொத்து

கவிதைக்கோ அவர் ஓர் கவியரசு

பழகியவர்க்கோ அவர் ஒரு பாமரன்

இந்து மதத்தில் பிறப்பெடுத்து

எல்லா மதத்தையும் நேசித்த நாத்திகன்

எம்மதமும் சம்மதமென்று

மக்களுக்கு புரியவைத்து

கண்ணனைப் பாடி, மனம் மாறி

ஆத்திகனானதும் அற்புதமே!

 

கோப்பையும், கோல மயிலும்

குடிகொண்டு வாழ்ந்த

இந்திய நாட்டின் உமர் கய்யாம்!

அவர் வாழ்ந்த வாழ்க்கை

சுருதி சேராத இராகங்களாய்

சுவர்ண சுந்தரிகள் வந்துபோன

அரங்கமும் , அந்தரங்கமும்

நிறைந்திருந்த வாழ்க்கையின்

உண்மைதனை பெருமையாய்

பாடி மகிழ்ந்த பெருங் கவிஞன் !

 

திரை இசைப் பாடல்களில்

முத்திரை பதித்த கவிஞன்

மனவாசமும் வனவாசமும் கண்டு

தன் வசந்தகால வாழ்க்கையில்

அர்த்தமுள்ள இந்து மதத்தையும்

இயேசு காவியத்தையும் எழுதியவன்

எந்த நிலையிலும் எனக்கு

மரணமில்லையென்று கூறி

அழியாக் கவிதைகள் படைத்து- நம்

நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும்

மாபெரும் கவிஞனவன்!

 

 

 

 

சனி, 1 பிப்ரவரி, 2014

கனவுகளில் வந்துபோகும்


பனி படர்ந்த மலைநாட்டில்

பணி புரிந்து வாழ்ந்தபோது

உறைகுளிரும் அடைமழையும்

ைகோர்த்த பொழுதுகளில்

ுளிருக்கான அர்த்தத்தினை

உணர்ந்து அறிந்தது மனம்

 

அடுத்த ஊர் பயணத்தில்

நடுக்காட்டில் மாட்டியபோது

எரியும் தணலின் ருசிதேடி

அகமும் புறமும் ஏங்கித்தவிக்கும்

உடலின் வேதனையை

உணருமா இந்த மலைநாடு?

 

இடமாற்ற உத்தரவால்

இந்த மலைநாட்டை பிரிந்து

ண்டுகள் பல கடந்தாலும்

ாயைப் பிரிந்த சேயைப்போல்

க்களையும் குளிரையும்

மறக்க மனம் கூடுதில்லை

 

ேற்றூரில் வாழ்ந்து

மறந்திருந்தாலும்

மலைகளைக் காணும்போது

மனம் மலர்ந்து மணக்கிறது

மறையாத நினைவுகளாய்

ாழ்ந்த அந்தத் தருணங்கள்

 

ஓய்வு பெற்று வாழ்ந்தாலும்

நலம் குன்றி படுத்தாலும்

கனவுகளில் வந்துபோகும்-அந்தக்

குளிர் பொழுதில் நடுங்கியதும்

கள்ளங்கபடமற்ற மக்களின்

நினைவுகளும்

 

 

சரித்திர நாயகன்


ெல்சன் மண்டேலா.

நினக்கும் நெஞ்சங்களை

நனையவிட்டு

நெகிழவைத்த மாமனிதன்

உறவு பிறப்பால் மட்டுமல்ல

அணைப்பும் பிணைப்புமென

உணர்த்திய குணக்குன்று

 

ன்னும் வேணுமென்று

ிரிவடையும் உள்ளம்

ாகும்வரை போதுமென்று

சொல்லாத அரசியலார் நடுவில்

குடிசையில் வாழ்ந்து

கோட்டைக்கு வந்தும்- போதுமென்று

குடிசையை நாடிய கோமகன்

 

தெற்கு ஆப்பிரிக்காவில் பிறந்து

வடக்கிலிருந்து வந்தாண்டவரை

பணியவைத்து

வெள்ளையரை செதுக்கி

கருப்பின மக்களுக்கு

சுதந்திர சிலையாய் மாற்றி

வடிவமைத்த சிற்பி

 

இருபத்தேழு ஆண்டுகள்-சிறையில்

இளமையைத் தொலைத்தும்

மன்னிப்பு கோராத

வைராக்கிய பெருந்தலைவன்

வீழ்ச்சியில் கலக்கமோ

எழுச்சியில் மயக்கமோ

இல்லாத தெய்வமகன்

 

தர்மம்,சத்தியம்,நேர்மை

அத்தனையும் சேர்ந்த

மொத்த உருவெடுத்து

நதியாய் மாறினாய்-கருப்பின

மக்களின் நாகரீகம் வளர்ந்தது

உலகம் உள்ளமட்டும்-மக்கள்

உள்ளம் உன்னை மறக்காது

 

பிறந்ததும், மறைந்ததும் குலுவில்

ஒரு வரலாற்று சின்னம்

குலு மண்ணை முத்தமிட்டது  

குலுங்கி அழுதது குலுமட்டுமல்ல

பூலோகமே புதைந்தது கண்ணீரில்

கருப்பினத்தை விழிக்கவைத்து

உறங்குகிறான் ஒரு சரித்திர நாயகன்