வியாழன், 25 ஜூன், 2020

வெற்றியின் சிறப்பு


ஒடுங்கி அடங்க
ஒடுங்க வேண்டிய
இடத்தை பொறுத்தது,
ஒடுக்கி அடக்க
எண்ணுபவர்களிடம்
வெடித்துச் சிதறுவதே
வெற்றியின் சிறப்பு


வலிமையுமுண்டு







சுவையறியும்
உணவருந்தும்
வாய்க்கு
பேசவும் தெரியும்
இத்தனையும்
இயற்கை தந்த வரங்கள்,
உள்ளிருக்கும் நாக்கோ
கூடா நட்புபோல்
உளறி விடும் சில சமயம்
உதை படும் உடல்
உடை படும் பற்களும்,
சிரசும்
சொல்லுக்கு
வலியுமுண்டு,
வலிமையுமுண்டு


வாழ்ந்ததில் அர்த்தமிருப்பதால்






மண்ணில் வந்துதித்த மனிதனுக்கு
மனதில் ஒரு நோக்கம் வேண்டும்
அது அடுத்தவர்களின் வாழ்வுக்கு
பயனளித்தால்,
அப்படிபட்ட ஒருவரின் வாழ்க்கை
அர்த்தமுடையதாய் அமையும்

வாழும் வாழ்க்கையில் பணமும்
வெற்றியும் தான் உயர்வு தந்து
மகிழ்வைத் தருமென எண்ணி
மனம் கெட்டு பேராசையால்
வஞ்சகத்தால் பொருளீட்டி
வாழ்வதில் அர்த்தமுண்டா ?

தேனீயுடைய எச்சில் தேன்
பட்டு பூச்சியின் எச்சில் பட்டு
பாரிலுள்ளோர்க்கு பயன்படும்
இந்த இரு பொருளால்
அந்த பூச்சிகளின் வாழ்விலும்
உன்னத நோக்கம் இருக்குமோ ?—அவைகள்
வாழ்ந்ததில் அர்த்தமிருப்பதால்.



மாறலாம்




கையிலெடுத்த காகிதம்
கற்பனையோடு கூட்டு சேரும்
கவிதை, காவியம் படைக்கும்
கல்விக்கு பெருமை சேர்க்கும்
கல்விக்கூடத்திலும், நூலகத்திலும்
கம்பீரமாய் வந்து அமரும்

கடைகளுக்கு வந்து விடும்
காகிதமோ பொருட்களை
கட்டிக் கொடுக்க உதவியும்
கண்டுகொள்ளாத மனிதர்கள்
காரியம் முடிந்ததும் தூக்கிக்
குப்பை தொட்டியில் வீசுவார்கள்

கற்றோர் கைகளிலும்
கற்போர் கைகளிலும்
காகிதமே நீ  இருந்து
கல்விக்கு அழகு சேர்த்திடு,
கைவிடமாட்டார்கள் உன்னை
கரண்சியாகக்கூட நீ மாறலாம்


புதன், 17 ஜூன், 2020

போகுதாம் !





படை எடுத்து வந்து
பாராள நினைக்கும்
பகைவனை அழிக்க
ஊரடங்கு சட்டம் ,
வெளியே வராம மக்களை
தடுத்து நிறுத்தியதால்
தாகம் தணிப்பதற்கு
தண்ணீர் இல்லாம
தவிக்கும் மக்களைக்
காட்டு விலங்குகள்
கரிசனத்தோடு ஊருக்குள்
வந்து,வருந்தாதே என
ஆறுதல் சொல்லிப்
போகுதாம்.

இயல்பைக் காட்டிவிடும்





வீதியில் நடந்து செல்லும்
வழிபோக்கர்  ஒருவர்
வீதி பெயரை சொல்லி
அவ்வழியே சென்றவரிடம்
வழி கேட்டார்

 அதற்கு அவர்அந்த வீதியா
எந்த முட்டாளைக் கேட்டாலும்
சொல்வார்களேஎன்றார்,
வழிபோக்கரோஅதனால் தான்
உங்களிடம் கேட்டேனென்றார்
இது தேவையா ?

அடுத்தவரை அவமதித்தால்
அசலும், வட்டியுமாக திரும்பும்
என உணர வேண்டும் ,     
பிறரை இகழ்வது
பண்பற்றவனின் செயல்

மல்லிகைப்பூ கடைக்கு
மணமே விளம்பரம்
ஆவதுபோல்
இகழ்ந்து பேசும் பேச்சே
அவரின் இயல்பை காட்டி விடும்


எப்படி சொல்வார் ?




இல்லாள் இறந்து போனதும்
பிள்ளைகள் இருவரும்
பணி நிமித்தம்
அந்நிய நாட்டில் வாழ்ந்ததும் ,
எண்பது வயதுடைய
பெரியவர்  ஆதரவின்றி
அநாதையானதின்
அலங்கோலம்

தெய்வத்தின் கருணையோ
தள்ளாத உடலோடு
தடுமாறும் கால்கள்,
கை நடுக்கமும்
கவலை தரும் மறதியும் தான் ,
எஞ்சிய நாட்கள்
எப்படி போகுமென்று
பெரியவர் கண் கலங்கியதுண்டு

கொரோனா வந்தது
கூடவே ஊரடங்கும்
சேர்ந்து வந்ததுதனிமை
செல்லப் பிள்ளை போல
2 மாதங்கள் வெளியே எங்கும்
செல்லாம வீட்டிலிருக்கக்
கற்றுக்கொடுத்தது
கொரோனா

பாடம் நடத்தியது போல்
பெரியவருக்கு


புரியவைத்து வழிகாட்டி
இப்படித்தான்
இருக்குமென்று
கற்றுக் கொடுத்த அந்த
கொலைகாரப் பாவிக்கு
எப்படி சொல்வார் நன்றி ?


வியாழன், 11 ஜூன், 2020

மண்ணில் மிதிபடுவது





தெய்வத்திருநாள் உற்சவம்
தெய்வச்சிலையை சப்பரத்தில் ஏற்றி
ஊர்வலமாக தூக்கி சென்ற
ஊரிலுள்ள பக்த கோடிகள்
பஜனை பாடியபடி
ஆடி,பாடி மகிழ்ந்தார்கள்

சப்பரத்தில் வீற்றிருந்த
சாமி சிலை கீழே விழுந்ததை
யாரும் கவணிக்கவில்லை,
ஆட்ட பாட்டத்தில் சாமி சிலை
மண்ணில் கிடந்து மிதி பட்டது
மாயவனின் நிலை பரிதாபமானது

தெய்வத்தின் திருவிழாவில்
தெய்வத்தைத் தொலைத்துவிட்டு
தங்களது உணர்ச்சிகளுக்கு மட்டுமே
அடிமையாகும் ஊருசனம்போலசிலரின்
தன்னல உணர்வால், மக்கள் நலன்
மண்ணில் மிதிபடுவது வேதனை தான்

வாழத்தெரியலையே !



 
வாட்டிடும் வறுமை
வாடித்தவிக்கும் ஏழைகள்
உடனடி இலவசம்
உயிர்களைக் காக்கும்ஆனால்
நிரந்தரத் தீர்வாகுமா?
இல்லை ஏழைகள் எப்போதும்
இப்படியே வாழனுமா?

இதுபோல என்றும்
அப்பாவிப் பெண்களின்
வாழ்வை கெடுக்கும்
வரதட்சனைக் கொடுமை,
அனுதாபப்படும் சமூகம்
அதை அகற்றுவதற்கு
இன்னும் வழி தேடலையே !

கன்னிப் பெண்களின்
கற்பை சூறையாடிக்
கொல்லும் காமுகர்களைக்
கண்டுகொள்ளாததுஅவர்கள்
கங்கையில் புனித நீராடினார்களா ?
அறம் பேசும் நமக்கு
அறத்தின் படி வாழத்தெரியலையே !