சனி, 24 நவம்பர், 2018

மேலும் காலியாக்கவா?




வெட்கமில்லாம
வெளிச்சமில்லா நேரத்தில
ஊரைக் கெடுக்க வந்தீர்களோ!

களவாட வந்ததுபோல்
கைகோர்த்து வந்து
கைவரிசை காட்டினீர்களோ!

இருவரும் ஆடிய ஆட்டத்தால்
இதயம் பறிகொடுத்த மரங்கள் சாய
மாற்றாக மக்களை தெருவில் நட்டீர்களோ!

ஆடிவிட்டு போனாலும்
ஊரையே அழித்து மக்களின்
சாவுக்கு வழிகாட்டலாமோ!

உங்கள் இருவரையும்
உயிர் காக்கும் தெய்வங்களாய்
உளமாற போற்றினோமே!

கண்ணுக்கு தெரியாத காற்றும்
மண்ணுக்கு பெய்த மழையும்
மீண்டும் பூம்புகாரை நினைவு படுத்துதோ!

படைத்தல், காத்தல், அழித்தல்
இயற்கையின் செயல்களென எண்ணி
அதில் உங்களையும் இணைத்தீர்களோ!

கஜாப் புயலே, நீ இங்கு வந்தது
காசுக்கு மக்கள் கையேந்தவா?—இல்லை
கஜானாவை மேலும் காலியாக்கவா?

சனி, 17 நவம்பர், 2018

குடில் தேடி வந்திடுவார்




நாண()யம் உள்ள

நல்ல மனிதர்போல்

நடிக்கும் இவரிடம்

நேர்மை இருப்பதில்லை



பொதுநலம் குறித்து

பொழுதெல்லாம் பேசுமிவர்

பத்திரமா சுயநலத்தை

பேணி காத்திடுவார்



பண்பு நிறைந்தவர்,

படித்தவரென்றாலும்

பணத்துக்காக

பேயாய் அலைந்திடுவார்



காந்தியத்தை நாளும்

கடைபிடிப்பதாய்க்

கூறும் இவர்

கள்ளத்தொழிலும் செய்திடுவார்



பரிவு காட்டுவதுபோல்

பாசம் பொழிவார்

பலன் இல்லையென்றால்

பாழும் கிணற்றிலும் தள்ளிடுவார்



சாதாரண மனிதர் நான்

சட்டத்தை மதிப்பவரென

சொல்லுவார்

சத்தியத்தை புதைத்திடுவார்



கொள்கைக்குக்

குரல் கொடுப்பார்பணம்

கொடுத்தால்

காற்றில் பறக்க விடுவார்



மக்களின் குறை தீர்க்க

மணு கொடுக்க சொல்வார்கொடுத்து

மாதங்கள் பல கடந்தாலும்

மௌனம் காத்திடுவார்



காணுமிடமெங்கும்

காட்சி தரும் பெருமகனார்

கழுத்து மாலையோடுஒரு நாள்

குடில் தேடி வந்திடுவார்.