சனி, 27 ஜூலை, 2019

என்றும் நிலைத்திருக்கும்




இராமனுக்கு பணிந்து
சேவகம் செய்தவன் அநுமன்,
இராமனின் திருவடியின் கீழ்
இருப்பவன்
இராமனின் இதயத்தில்
இருப்பவனாகி

அனைவரையும் விட
அதிக உயரத்தில் இடம் பிடித்தது
அநுமனின்  நற்குணத்தால்
அதுபோல

மலையின் எச்சில், அருவி
மானின் கழிவு ,கஸ்த்தூரி
புனுகு பூனையின் கழிவு, சவ்வாது
மண்ணுக்குள் புரளுவது
பொன் வண்டின் எச்சில், தேன்
சிப்பி துப்பியது, முத்துஅனைத்துக்கும்
பிறக்கும் இடமும், இருக்கும் இடமும்
நிரந்தரமில்லை

இவைகளின் குணத்தாலும்,
தகுதியினாலும் தான்
மக்கள் மனதில் புகுந்து
அதிக உயரத்தில் இடம் பிடித்தன
அது என்றும் நிலைத்திருக்கும்



சனி, 13 ஜூலை, 2019

சமய சஞ்சீவி தானே!






பேரரசன் நான்
பெரியவனா?—இல்லை
புவியாளும் இறைவன்
பெரியவனா?  என்று கேட்டு
அதற்குரிய காரணத்தையும்
சொல்லும்படிக் கூறினார்
அந்த மொகலாயப் பேரரசர்
தனது அரசவையில்

பீர்பால் என்னும் அறிஞர்
பதிலளிக்கும் விதமாக
அரசே
 அண்ட சராசரமும்
இறைவனுடையதாய் இருப்பதால்
ஈசன் தனது எல்லையை விட்டு
எந்த ஒரு மனிதனையும்
நாடு கடத்த இயலாது

ஆனால் தாங்களோ
உங்களுக்கு பிடிக்காதவனை
வெகு எளிதில்
நாடு கடத்தி விடுகிறீர்கள்,
அதனால்  நீங்கள் தான்
இறைவனைவிட பெரியவர்என்றார்
சமயத்துக்கேற்ற புத்தி
சமய சஞ்சீவி தானே!

காரணமாகக் குறிப்பிடுவர்





எனது நன்பர் ஒருநாள்
தனது வீட்டில்
உணவருந்த அழைத்தார்
நானும் சென்றேன்

வரவேற்ற கையோடு
உங்களுக்கு என்ன பிடிக்கும்?
என்று நண்பரின் மனைவி
கேட்டாள்

நான் அதற்கு
நண்பருக்கு என்ன பிடிக்குமோ
அதையே செய்யுங்கள்
அது போதும் என்றேன்

அதற்கு நண்பரின் மனைவி
அவர் எதைப் போட்டாலும்
தின்பார் என்றாள்எனக்கு
திக் கென்றது

அவருக்கு சுவைக்கும் இரசனை
இல்லாததால்எனக்கும்
சுவையோடு சமைக்கும் கலையும்
இல்லாமற்போனது என்றாள்

அலை நிறைந்த கடலில் தான்
அறிவும்,அநுபவமும் உள்ள
மாலுமிகள் பயணிப்பார்கள்
மக்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்

 சிலர் தங்களது திறமைக்

குறைவுக்கு,  அடுத்தவரின்
திறமைக் குறைவைக்
காரணமாகக் குறிப்பிடுவர்