திங்கள், 18 ஜனவரி, 2021

உயர்த்த வேண்டும்

 

சேற்றில் தோன்றும்

செந்தாமரைப் பூவின் மீது

சேறு சேருவதில்லை,

மீனும் அதே சேற்றில்

பிறந்து வாழ்ந்து

புரண்டாலும் மீனின்

உடலிலும் ஒட்டாது

அதுபோல

 

ஏழ்மையில் பிறந்து

வறுமையில் வாடினாலும்

ஏழ்மையை சுமந்தபடி

எப்போதும் வாழாமல்

 உயர் கல்வி கற்று

உயர வேண்டும் நீ--பிறரையும்

உன்னைப்போல

உயர்த்த வேண்டும்

 

அதுபோலத்தான் மரணமும்

 

பணம், கௌரவம் வேண்டி

போட்டி போட்டுக் கொண்டு

பெற முயற்சிப்பது,

சுகத்தைத்  தராமல்

சோகத்தைத் தந்து விடும்

சில சமயம் உயிரை பறித்து விடும்

 

நாமே உருவாக்கிக் கொள்ளும்

நமது மன அழுத்தத்துக்கு

போதும் என்ற மனமேஅதனை

போக்கும் மருந்தாகும்,

மன அழுத்தம் அதிகரித்தால்

மரணமும் நேசிக்கும்

 

கண்ணாடி போன்றது மனம்

கவணமாகக் கையாள வேண்டும்,

இல்லையேல் உடைந்து விடும்,

முயற்சி நம் கையில்

முடிவு நம்மிடமில்லை

மரணத்துக்கும் அதே தான்

 

 

 

சனி, 2 ஜனவரி, 2021

சாக்காடு தான்

 

பாம்பாட்டியின் மகுடிக்கு

பாம்பு ஆடும், அடங்கும்,

பாம்பாட்டியின் வயிறும் நிறையும்

அடங்காமல் போனால்

அந்த பாம்பு கொடுமையானது

அவனைக் கொல்லவும் செய்யும்

 

பாம்பை போலத்தான்கடவுள்

 படைத்த மனித நாக்கும்

மானுடத்துக்கு மரியாதை சேர்க்கும்

முரண்பட்டால் உயிரையும் பறிக்கும்

நமக்குக் கட்டுபட்டால் அது நாக்கு

நாம் கட்டுபட்டால் சாக்காடு தான்

உத்தரவாதம் இல்லையே !

 

ஓற்றை மொழியோடு

ஒற்றுமையாய் உயிர் வாழும்

காட்டு விலங்குகள்

கண்ணியமானது,

அடுத்த விலங்குகளை

ஒருபோதும்

கெடுக்க நினைக்காது

 

தனது பசி போக்க மட்டும்

தன் நலம் பார்க்கும்,

பழகி விட்டால்

பாசத்தோடு விசுவாசம் காட்டும்

வஞ்சிக்கத் தெரியாத

விலங்குகளிடம் மானுடம்

கற்றுக் கொள்ள ஏராளம் உண்டு

 

சுதந்திரம் பெற்ற மக்கள்

சாதி, மதங்களால் பிரிந்து

சண்டையிட்டு

 சாவதை தடுத்து

எல்லோரையும் ஒன்று படுத்தி

ஒரு தாய் பிள்ளைகளாய்

ஒற்றுமையாய்  வாழவைக்க

ஒருவர் கூட எண்ணலையே !

 

இந்திய மண்ணில்

இதிகாச காலம் தொட்டு

இன்று வரை

பங்காளி சண்டைகள் போல்

பரம்பரையாய்      

பகைமை தொடர்வதால்

உணவுக்கும், நீருக்கும் இன்றுவரை

உத்தரவாதம் இல்லையே !