சனி, 2 ஜனவரி, 2021

உத்தரவாதம் இல்லையே !

 

ஓற்றை மொழியோடு

ஒற்றுமையாய் உயிர் வாழும்

காட்டு விலங்குகள்

கண்ணியமானது,

அடுத்த விலங்குகளை

ஒருபோதும்

கெடுக்க நினைக்காது

 

தனது பசி போக்க மட்டும்

தன் நலம் பார்க்கும்,

பழகி விட்டால்

பாசத்தோடு விசுவாசம் காட்டும்

வஞ்சிக்கத் தெரியாத

விலங்குகளிடம் மானுடம்

கற்றுக் கொள்ள ஏராளம் உண்டு

 

சுதந்திரம் பெற்ற மக்கள்

சாதி, மதங்களால் பிரிந்து

சண்டையிட்டு

 சாவதை தடுத்து

எல்லோரையும் ஒன்று படுத்தி

ஒரு தாய் பிள்ளைகளாய்

ஒற்றுமையாய்  வாழவைக்க

ஒருவர் கூட எண்ணலையே !

 

இந்திய மண்ணில்

இதிகாச காலம் தொட்டு

இன்று வரை

பங்காளி சண்டைகள் போல்

பரம்பரையாய்      

பகைமை தொடர்வதால்

உணவுக்கும், நீருக்கும் இன்றுவரை

உத்தரவாதம் இல்லையே !

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக