வியாழன், 24 செப்டம்பர், 2020

தெய்வம் தந்துவிட்டது

 

அமெரிக்காவில்

கொலை குற்றம் புரிந்த

குற்றவாளி ஒருவன்

தூக்கிலிடப்பட்டான்,

தூக்கிலிருந்து அவனை

விடுவித்த பின்னும்அவனுக்கு

உயிர் இருக்கக் கண்டனர்

 

இரண்டாம் முறை அவனை

தூக்கிலிட  சட்டத்தில் இடமில்லை

என்ன செய்வதென்று

தெரியாமல் அதிகாரிகள்

திகைத்து  நின்றபோதுஅவன்

ஊமையாகிவிட்டதை

உணர்ந்தனர்

 

விடுதலையானான்

ஊமையாய் ஊரெங்கும்

சுற்றி திரிந்தான்,

இறைவனின் கூற்றுபடி

தவறிழைத்தவனுக்கு

தண்டனையை

தெய்வம் தந்துவிட்டது

 

நினைக்காதே எப்போதும்

 

அகிலம் போற்றும்

       ஆதவனே, மாயவனேஉன்

அருள் விழி ஈரத்தால்

        அனைவரும் உயிர் வாழ

கொடை போல நீ

         கொடுத்த வரத்தால்

 

கொட்டி தீர்த்த மழை

         கரை புரண்டு ஓட

கட்டிய வீடும் , பொருளும்

        கால்நடை ஜீவன்களும்  

ஆற்று வெள்ளத்தில்

         அடித்து செல்ல

 

அனைத்து உயிர்களுக்கும்

         ஆதாரம் நீயென்று

குடிக்க நீரும், வெப்பத்தை போக்கவும்

         கும்பிட்டு வேண்டினோம்

நீயோ அனைத்தையும் அழித்து எங்களை

     நடு வீதியில் நிற்க வைத்தாயே

 

ஆதவனே, முதல்வனே

       ஆணவம் எதற்கு உனக்கு?

அரவணைத்துக் காக்க

        அளவோடு தந்தால் போதாதோ !

நானே இராசா, நானே மந்திரியென

         நினைக்காதே எப்போதும்

 

 

        

                                                                                                                                                                                        

கருணை காட்டக் கூடாதா !

 அண்ணன் , தம்பியோட

     நீ பொறந்திருந்தா

அரவணைக்க உனக்கு

      தெரிஞ்சிருக்கும்

நானே இராசா,

       நானே  மந்திரியென

 

நேரம் தவறாம

      நேர்மையா நீ உழைச்சு

நாள் முழுதும் வீனா

       நீ ஊர் சுத்திரியே

மக்களின் துயரை

       மனசாலும் நினைக்கலையே

 

கோடை வெய்யிலின்

       கொடூரத்தை போக்கி

வெப்பத்தைக்  குறைத்து

        வாழவைக்கக் கூடாதா ?

கதிகலங்கி நிற்கும் மக்களுக்குக்

          கருணை காட்டக் கூடாதா

வியாழன், 17 செப்டம்பர், 2020

மாலை சூடவா ?

 

பூமியில பொறந்தவளே

பூச் செடியா வந்தவளே

உசுரோட நீ இருந்தும்

ஒத்தையில நிக்கிறியே !

 

தலையில பூவில்ல

நெற்றியில ஒன்னுமில்ல

ஏண்டி உனக்கிந்த நிலை

என்னடி உன் மனக் கவலை ?

 

மண்ணில் வாழ் மாந்தருக்கு

மங்கள வாழ்வு தரவா ! – இல்லை

மாயவனிடம் மனத்தை பறிகொடுத்து

மாலை சூடவா?

நிச்சயம் வந்தே தீரும்

 

அன்னதானத்திற்கு

இனையான கொடை

எதுவுமில்லையென்று

வேதங்கள் சொல்லியதை

கொரோனா நிரூபித்தது

 

அன்னமளிப்பது

உயிரைத் தருவதற்கு சமமாகும்,

அன்றைய மக்கள்

அன்னமிட்டவர்களை

இறைவனாக போற்றினார்கள்

 

பொது மக்களுக்கு இன்று

பொதுவாகவுள்ள சோறு, நீரு, காற்றை

பேராசைக்காரர்கள் பதுக்குவதால்

பாவப்பட்ட ஏழை மக்களுக்கு

போய் சேராப் பொருளானது

 

பதவியிலுள்ளோரின் தீராத

பணப் பசியால்,

பாவம் ஏழை மக்கள் வயிற்று பசிக்கு

பரிகாரம் தேடுவதுபோல்

தூக்குக் கயிற்றில் தொங்குகிறார்கள்

 

ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள்

எத்தனை பெரிய மனிதனானாலும்

வாழ்வில் ஒரு நாள் உணவுக்காக

அடுத்தவரை சார்ந்திருக்கும் நிலை

நிச்சயம் வந்தே தீரும்

 

 

பார்த்துக் கொள்வான்

 

நல்ல உள்ளங்களுக்கு

நன்மை பயக்கும் விதமாக

நல்ல உறவுகளையும்,

நண்பர்களையும்

இறைவன் படைத்தான்மன

நிம்மதிக்கு வழி வகுத்தான்

 

உறவுகளிடமும், நட்புகளிடமும்

உண்மையாக இருங்கள்

மனம் விட்டு பேசுங்கள்,

ஆழ உழுத நிலம்போல

நற்பலனையும், புரிதலையும்

நிறைய பெறுவீர்கள்

 

சரியான புரிதலோடும்

சந்தேகத்திற்கு இடமின்றி

மனித நேயத்தோடு

மனமாற நேசியுங்கள்மீதியை

படைத்தவன் ,பண்புள்ளவன்

பார்த்துக் கொள்வான்

 

 

 

அவரவர் வழி

 

இறைவனை அடைய

சீடன் குருவிடம்

வழி காட்ட சொன்னான்,

வாய்மையை உணர்ந்த குரு

வாய் மூடி மௌனமானார்,

மீண்டும் வேண்டினான்

மௌனமாக இருந்தார் குரு

 

இறைவனைக் காணாமல்

சினம் கொண்ட சீடன்,

கதவுகளைத் தட்டினான்

கதவுகள் திறக்கவில்லை—“குருவே

இங்கு நான் இருப்பதில்

அர்த்தமில்லை அதனால்

விடை கொடுங்கள்என்றான்

 

குரு சொன்னார்நான்

கதவுகளைத் திறந்து வைத்து

காத்திருந்தேன் மௌனமாக

குறை என்னிடமில்லை,

பாதம் இருப்பவர்க்கு

பாதையும் இருக்கிறது

இறைவனை அடைய

அவரவர் வழி அவரவர்க்கு

 

 

 

வியாழன், 10 செப்டம்பர், 2020

விரட்டி விடுமோ !

 

ஆறு குழந்தைகள் பெற்று

அத்தனையும் படிக்க வைத்து

ஆளாக்கி வளர்த்து விட்டவர்

அறுபத்தைந்து வயது முதியவர் ,

அன்பு மனைவியை இழந்தவர்

இன்று அனாதையாய் தெருவில்

 

தனி மரமா நின்று குடும்பத்தைத்

தாங்கிக் கரை சேர்த்தவர்இன்று

தான் வாழ வழியின்றி

தனிமையில் சுற்றித் திரியும் நிலை,

தடுமாறும் வயதுடைய முதியவரை

துரத்தி விட்டது துரோகமல்லவா !

 

பணத்தை முதலீடு செய்வது போல்

பாசமுள்ள அன்பும் முதலீடு தானே !

வங்கியில் போடும் பணம்

வட்டியையும் கூட்டி வரும் ,

பாசத்தின் அன்பு முதலீடுமுதிய

பெற்றோரை வீட்டிலிருந்து விரட்டி விடுமோ