திங்கள், 20 மே, 2019

கலைந்து போனது.




தேர்தலுக்கு ஓட்டு கேட்க
தெருவுக்கு வந்த பேச்சாளர்
பேப்பரை எடுத்து
பேச ஆரம்பித்து
நெஞ்சைத் தொடும் வண்ணம்
நெகிழ்ச்சியோடு பேசுகையில்

கூட்டத்தில் நின்ற பாதி பேர்
கூக்குரலிட்டு ஓலமிட
பேச்சாளர் கோபமுற்று
பேச்சை நிறுத்தி விட்டு
கூட்டத்தில் இருப்போரில் பாதி பேர்
கழுதைகள் என்றார்

தெருவில் நின்றோரில் சிலர்
தரக்குறைவான
இச்சொல்லைத்
திரும்பப்பெறவேண்டுமென்றும்
மன்னிப்பும் கேட்க வேண்டுமென
முறையிட்டனர்

மரியாதைக்குரிய பேச்சாளர்
மன்னிப்புக் கேட்பது போல்
பேச்சைக் கேட்க வந்தவர்களில்
பாதி பேர் கழுதைகளல்ல என்றார்
கலாட்டாவைக் கைவிட்டனர்
கூட்டம் கலைந்துபோனது

கற்றவனே மேல்




படிப்பை  முழுமையாய்
படித்து முடித்தபோதும்,
மருத்துவரும், வக்கீலும்
முழு பொறுப்பு இல்லாத
பயிற்சியாளராகத்தான்
பணியில் சில காலம்
பணிபுரிய வேண்டும்

பாராள வருவோர்க்கு
படிப்பு முக்கியமல்ல,
நல்ல நேர்மையும்,
நாட்டு மக்கள் நலத்திலும்
படித்த அறிவோ, பட்ட அறிவோ
ஏதுமில்லாமசமூகம்
எப்படி ஏற்றுக்கொள்கிறது?

வாழும் மக்களுக்கு
உணவும், நல்ல குடிநீரும்,
படிப்பும், வேலையும்
நலம் காக்க சுகாதாரத்தையும்
உறுதிபடுத்துவது இவர்களின்
முக்கிய கடமையல்லவா?--தவறினால்
மரியாதைக் குறையாதோ?

தேர்த்திருவிழா போல
தேர்தல்கள் வந்து போகும்,
குழந்தைகள் பெறும் காசு போல
கைமாறும் பணத்தால் சில நாட்கள்
வயிறு நிறையும், மனசு மாறும்
மக்களுக்கு இது வாடிக்கை,
ஒரு நாட்டின் வளர்ச்சிக்குக்
கொற்றவனைவிட கற்றவனே மேல்.

சனி, 11 மே, 2019

வாழ்ந்திடுவோம்




வாழ்க்கை எல்லோருக்கும்
ஒன்றுபோல அமையாது,
வாழும் மாந்தருக்குக்
கருவறை தொடங்கி
கல்லறை வரை என்பது
கடவுள் படைத்தது

தனக்கென வாழ்வது
தவறானது
பாவம் என்கிறது
பகவத்கீதை,
மற்றவரையும் தன்னைப்போல்
மதிப்பவன் தான் மனிதன்

வாழும் மக்களுக்கு
வழிகாட்டுவது
வெற்றி பெறும் அரசின்
பெரும் பொறுப்பு
வருமுன் காத்து
வறுமையை ஒழிக்க வேண்டும்

அறிவால் காத்து
அன்பால் ஒன்றுபட்டு
வாழ்க்கையை
வளமாக்குவோம்,
வாழும்போது நல்லபடியா
வாழ்ந்திடுவோம்

பழியா? பாவமா?




பள்ளம் நோக்கி பாயும்
வெள்ளம் போல
உள்ளம் குதித்து மகிழும்
ஊழலில் விழுந்து கரையும்,

 

அறுக்கமாட்டாதவன் கையில்
அறுபது அரிவாள் என்பதுபோல
அதிகாரம் உள்ளோருக்கெல்லாம்
இறைவன் தந்த வரம்
இந்த ஊழல்

பாவம் ஏழை மக்கள்
பட்டினியால்  வாடினாலும்
கப்பம் கட்டுவது
கட்டாயமாகும்—யாரும்
பாவமென்று கருதலையே!

ஓடும் நீரில் மிதந்து
போகும் சடலம் போல
போகிற போக்கில்
போவது வாழ்வா அது?
பழியா? பாவமா?