வெள்ளி, 24 ஜூலை, 2020

கல்லறை மட்டும்






தான் உழைத்து சேர்த்த பொருளை
தன்னை விட்டு நீங்காமல்
பாதுகாத்து வாழ்பவன் ஒரு நாளும்
பிறரது பொருளைத் தவறான
முறையில் அபகரிக்க எண்ண
மாட்டான்அதனால்
மக்களும் அவனை மதிப்பார்கள்

துன்பப்படும் ஏழைகளுக்கு சிலர்
உதவுவது போல் கடன் கொடுத்து
பின்பு தரவேண்டிய
பணத்துக்கு வட்டிக்கு வட்டி போட்டு
அவர்களின் சொத்துக்களை
அபகரிக்கும் நயவஞ்சகர்களும்
நாட்டில்  உண்டு

உயிர் பிரிந்த பின்புசொத்துக்கள்
உலகம் முழுதும் உனக்கிருந்தும்
என்ன பயன் என்பதை
என்றாவது நினைத்ததுண்டா ?
வாழ்வின் முடிவில் ஆறடி நிலம் தான்
வேண்டுமென்ற நிலையும் மாறி
தேவையில்லை என்றானது இன்று

அடுத்தவர் பொருள் மீது
ஆசைபட்டு அபகரிக்காமல்
உழைத்து வாழுங்கள்பிறரையும்
வாழவிடுங்கள் ,
அகிலத்தையே அடக்கி ஆள நினைத்த
அலெக்சாண்டரின் கல்லறையில்
எழுதப்பட்ட வாசகம்இப்போ
கல்லறை மட்டும் போதுமானது




ஈரம் கசியும்


கருணை உள்ளம் உருகிக்
கரையும்போது
இமை ஓரம் ஈரம் கசியும்

ஆர்ப்பரிக்கும்




நன்மை, தீமை
மகிழ்ச்சி, துன்பமென
அனைத்தையும் நம்
நெஞ்சிற்குக் கொண்டு
சேர்க்கும் மகத்தான பணிநம்
சொற்களுக்கானது

சாப்பாட்டில் ஒரு முடி
கணவன் சினம் கொள்ளாமல்
முடியைக் கையிலெடுத்து
மனைவியிடம் சொன்னான்—“உன்
தலையிலிருந்தாலும் அழகு
இலையிலிருந்தாலும் அழகுஎன்றான்

சினம் தனிந்து இருவரும்
சிரித்து மகிழ்ந்தனர் ,
இல்லறப் பாதையில்
இடையூறு ஏதும் பண்ணாம
மனக் கசப்பை நீக்கினால்என்றும்
மகிழ்ச்சி அலைகள் ஆர்ப்பரிக்கும்



வியாழன், 16 ஜூலை, 2020

பாய் விரிக்கும்






ஆதவன் படுக்க
அடிவானம் சிவக்கும்
இருளோ பாய் விரிக்கும்

இல்லாத ஏழைகளுக்கு





பூவுலகில் பிறப்பெடுத்த
உயிர்களுக்கெல்லாம்
தாகம் தணிப்பதற்கு
தண்ணீர் தர வேண்டி
ஆதவன் பொறுப்போடு
ஆணையிட்டான் மேகத்துக்கு

மனிதர்களைப்போல்
மேகம் சும்மா இராமல்
சூரியனிடம் முறையிட்டு
உதவி கோரியது ,
மேலே எழுந்தது கடல் நீர்
மேகம் மற்றதைக் கவணித்தது

மனிதனின் கல்லீரல் போல்
கடல் நீரை சுத்திகரித்து
குடி நீராக்க மேகம் முயற்சித்து
மழை நீராய் பொழிந்தது
மண்ணில் வாழ் உயிர்களின்
தாகம் தணிந்தது

மேகத்தை போல
மக்களின் துயரை போக்கி
மனம் மகிழச் செய்து
அடுத்தவருக்கு உதவினால்
அவர்களும் தெய்வம் தான்
இல்லாத ஏழைகளுக்கு




முதல் விளக்கு





இயற்கையை வணங்கிப் பழகின
அன்றைய முன்னோர்களுக்கு
ஒளி தந்து வாழ்வளித்த
அகல் விளக்கேமனிதர்களின்
ஆதார விளக்கென்று நீ
ஆணவம்  கொள்ளலாமா !

நல் உள்ளங்களும்
நாடாண்ட மன்னர்களும்
கோயில்களில் உன்னை வைத்து
கும்பிட்டதும் உண்மை தான் ,
ஆதி மனிதர்களின் இருளை
அகற்றியதும் நீ தான்

களி மண்ணால் உருவானாலும்
களி மண் என்று நினைத்து
உன்னை வெறுத்ததில்லை ,
வீசுகின்ற காற்றால்
நீ படபடத்த போதெல்லாம்
கைகொடுத்து உதவி
காத்தது மனிதர்கள் தானே !

இருந்தும் ஏன் இந்த ஆணவம் !
மனிதன் படைத்தான் உன்னைஆனால்
மண்ணில் உயிர்களை படைத்தது சூரியன்
வானில் பகல் விளக்காய்
ஒளி தந்து எரியும்போது
முதல் விளக்கு அது தானே !

வெள்ளி, 10 ஜூலை, 2020

கெடுவதில்லை





இறந்தவன்
இருப்பவனுக்கு வழிகாட்டி ,
இறப்பிற்கு அஞ்சுபவன்
அதற்கு எதிராக
போராடத் துணிவது
பெரும் ஆச்சரியம் தான்
அது தான் நமது
ஆன்மீகத்திற்கு ஆதாரம்

தன்னையே அழித்துக்கொள்ள
துணிவது எத்தனை பெரிய
திடமான முடிவு
தீர்க்கமான மனவலிமை ,
இதில் பாதி இருந்தால் கூட
அனைத்தையும் தாங்கியபடி—நூறு
வருடங்கள் வாழ முடியுமாம்
நம்பினோர் கெடுவதில்லை.





உருமாறி விடும்



ஆதி என்று ஒன்றிருந்தால்
முடிவு என்று ஒன்று உண்டு
மனித வாழ்வில்
மரணமும் அப்படித்தான்,
இறப்பே இல்லாவிடில்
பிறப்பு ஏது ?—வாழ்க்கையின்
மேலான நெறிமுறைக்கு
மரணம் ஒரு காரணம்

வாழ்க்கையின் பெருமை
வாழும் நாட்களில்லை
செய்து முடிக்கும்
செயலில் தான் உள்ளது ,
மரணம் துன்பங்களிலிருந்து
மனிதர்களை விடுவிக்க
அவர்களை தன் மடியில்
ஏந்திக் கொள்கிறது

கூட்டுக்குள் அடைபட்ட
குருவிக்குக் கிடைக்கும்
விடுதலையைப் போன்றது
மரணம், மனிதர்களுக்கு,
வாழ்க்கையில் வாழ்வதற்கு
வழியில்லாதபோதுமரணம்
கை கொடுக்கும்
கவலைகளை போக்கும்

உடலின் புண்ணுக்கு
உதவும் மருந்து ,
உயிரின் புண்ணுக்கு
மரணம் தான் மருந்து ,
மனித வாழ்வில்
மரணம் இல்லையென்றால்
உலகமே நரகமாக

உருமாறி விடும்


வியாழன், 2 ஜூலை, 2020

படுத்து கிடக்கிறாளோ!






கொட்டிக் கிடக்கும் செல்வத்தைக்
காலமெல்லாம் கட்டிக் காக்கும்
கடலன்னை களைத்து போனதால்

கண்ணயர்ந்து படுத்து கிடக்கிறாளோ !

கருதுவார்கள்




வெற்றி, தோல்வி முக்கியமல்ல
ஒருவனை மதிப்பிட
அவனது குறிக்கோள் தான்
அவனை உயர்த்தும்

வெள்ளாட்டோடு மோதி
வெற்றியடைந்தவனை விட
வேங்கையோடு போராடி
உயிரை இழந்தவன் உயர்ந்தவன்

விழுப்புண் பட்ட வீரன்
வீர மரியாதை பெறுகிறான்
சிலையாக செதுக்கப்படுகிறான்
அவனது குறிக்கோளால்

போரில் மாண்டவனை
போற்றி புகழ்ந்திடுவர்
தோல்வியுற்றாலும் ,வெற்றி
பெற்றதாகக் கருதுவார்கள்

உணரவேண்டும்




அதிகாரத்தை விட
அன்பு தான்
அதிகம் சாதிக்கும் ,
போதை ஒருவனைக்
கொல்லும்
அதிகார போதையோ
அவனையும் கொல்லும்,
அடுத்தவரையும் கொல்லும்

பலவீனம்
சிலரைக் கெடுக்கும் ,
அதிகாரம்
பலரைக் கெடுக்கும் ,
அடுத்தவரை ஜெயிப்பவன்
அறிவாளிஆனால்
தன்னைத் தானே ஜெயிப்பவன்
முழு அதிகாரம் உள்ளவன்

 ஒரு அரசாங்கத்தில்
அனைத்து அதிகாரங்களும்
மக்களுக்கே சொந்தம் ,
நேர்மை தவறாது
சேவை செய்வதால் கிடைக்கும்
அதிகாரம் தான்
ஒருவனை உயர்த்தும்
ஒற்றுமையை பலபடுத்தும்

அற்பணிப்பு மனதோடு                             
அடுத்தவருக்கு பணி புரியும்
அதிகாரமே சிறப்புடையது ,
ஆணவம் அழிவைத்தரும் ,
தான் வகிக்கும் பதவிக்கு
தவறான அதிகாரமே
தலை கவிழ வைக்குமென
உணரவேண்டும்