சனி, 24 ஆகஸ்ட், 2019

பலரிடம் உள்ளது




வட்டார அதிகாரிக்கு
வந்த கடிதத்துடன்பணம்
அய்ம்பதினாயிரம் ரூபாயும்
அதில் இருந்தது,
வருமானவரி ஏய்ப்பால்
உறக்கம்  வரவில்லைஅதனால்
இப்பணத்தைத்  தங்களுக்கு
அனுப்பியிருக்கிறேன்என்று
எழுதப்பட்டிருந்தது

மீண்டும்  தூக்கம் வராவிட்டால்
மீதித் தொகையையும்
உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்
என்று எழுதியிருந்தது
சிறிய குற்றதை அறிக்கை விட்டு
அதன் மூலம் பெரிய  குற்றத்தை
மறைத்து  வைக்கும் திறமை

மக்களில் பலரிடம் உள்ளது


சனி, 17 ஆகஸ்ட், 2019

இருவருக்கும் தான்





செங்கமலத் தாயாரின்
தேரோட்டத் திருவிழா
தாயாருக்கு பள்ளி பிள்ளைகளே
சாரதியானார்கள்

பிஞ்சுக் கரங்களில்
தஞ்சம் புகுந்த வடம் உதவ
தடையில்லா நீரோட்டம் போல்
தேரோட்டம்

தேரோட்ட வீதியின்
நெருஞ்சி முட்கள் கூட
பாலகர்களின் பாதம் பட்டு
பாவ விமோசனம் பெற்றது

சேயின் பலம் தாய்க்கு
தாயின் அருள் சேய்க்கு
பக்தகோடிகளின் வழிபாடு
இருவருக்கும் தான்


மனதின் ஆற்றலே




செடி, கொடி, மரம்
தோன்றுவது விதையிலிருந்து
என்றும் மாறாத நிகழ்வு,
இவை அனைத்தின் மாற்றமும்
காலத்தின் தன்மையென்று
உணர்த்துகிறது

காலம் மாறுவதில்லை
மாற்றமே
காலத்தின் அடித்தளம்,
கிழக்கே உதிக்கும் ஆதவன்
மேற்கிலே மறைவதும்
மாறாத நிகழ்வு

பிறப்பிற்கும், இறப்பிற்கும்
இடையே நிகழும்
காலத்தின் மாற்றத்தால்
நாளொரு பொழுதும்
நாம் வளர்ந்துகொண்டுதான்
இருக்கிறோம்

காலமெனும் அநுபவத்தால்
முதுமைக்கு அறிவு கூடும்,
காலத்தின் பழமையால்
முதுமை மரியாதை பெறும்
வாழ்வைக் காக்கும் சக்தி
மனதின் ஆற்றலே.

மாற்றிக் கொள்வதில்லை





தத்துவ பேராசிரியர் ஒருவர்
தன்னை கழுதையென்று
கூறியதற்காகக்
கணித பேராசிரியர் மீது
மானநஷ்ட வழக்கு
போட்டார்

கணித பேராசிரியருக்குக்
கோர்ட்டார் அவர்கள்
அபராதம் விதித்தனர்,
அப்பொழுது கணித பேராசிரியர்
கோர்ட்டாரை பார்த்து கேட்டார்
கழுதையைப் பார்த்து
  தத்துவ பேராசிரியர் என்றால்
 அது குற்றமா? “ என்றார்

கோர்ட்டார்  அவர்கள், அது
குற்றமாகாது என்றவுடன்
கணித பேராசிரியர்
தத்துவ பேராசிரியரேநான்
போய் வருகிறேனென்று
சொல்லி புறப்பட்டார்
கோர்ட்டார் சிரித்தார்கள்,
தண்டனை பெற்றாலும்
தங்கள் கருத்தை சிலர்
மாற்றிக் கொள்வதில்லை


சனி, 10 ஆகஸ்ட், 2019

பெருமை சேர்க்கும்.




தேடி வரும் சிறு பிள்ளை போல
ஓடி வந்து கரை தொட்டு
வாடி திரும்பும் கடலலைகள்
வருந்தாமல் இருக்குமா?
விட்டதுண்டா விடாமுயற்சியை?

இருந்தாலும் நாம்
இன்றைய குழந்தைகளுக்கு
வழிவழியாய்க் கற்று தருவது,
வாழ்க்கை பயணத்திற்கு
விடாமுயற்சி முக்கியமென்று

உண்மை தான் அது,
கடலன்னைக்கு சாவேது?
கலங்காதவள் ஒரு நாள்
சுனாமியை துணைக்கழைத்து
அலைகளைக் கரையேற வைப்பாள்

பாசமுள்ள  நமது அன்னையை
பறிகொடுத்தபின்
எங்குபோய் தேடுவது?
ஏதானாலும் விடாமுயற்சி
ஏற்றம் தரும், பெருமை சேர்க்கும்





தரமானதா?




பாமர ஏழை மீது
பாசம் காட்டும் சாலை ஓரம்
படுக்க இடம் கொடுத்து
புண்ணியம் தேடிக்கொள்ளும்,
சுதந்திர நாடென்றாலும்
உறங்கக் கூட சுடலை தானே!

பட்டினியின் துயராலே
பொணமாகி படுத்த அன்னை,
புதைக்க பணமிருக்காதே என
பெற்ற பிள்ளைக்குக்
கற்று கொடுத்தாளோ !—பெண்களின்
கழுத்து செயினை அறுக்க

மூவாயிரம் ஆண்டுகளுக்கு
முன் வாழ்ந்தவர்கள் நாம் என்று
மார் தட்டிக் கொண்டாலும்
மனித உயிர்கள் மலிவுப் பதிப்பல்ல,
பட்டப்பகலில் நட்ட நடு வீதியில்
வெட்டி சாய்ப்பது விவேகமா? இல்லை
வெட்கக்கேடா ?

இறைவனும், இயற்கையும்
இருப்பதோ ஒன்றுபோல
இருந்தும் நாட்டு நடப்பாட்டம்
உயிர்களைக் காக்காம
ஒன்றை ஒன்று குறை கூறி
தப்பிக்க நினைப்பது
தரமானதா? இல்லை தவறானதா?


சனி, 3 ஆகஸ்ட், 2019

வீடும், நாடும் வளம்பெறும்




அடித்தளம் உறுதியாக இருந்தால்
அதன்மேல் எழும் கட்டிடமும்
தலை நிமிர்ந்து நிற்கும்அதுபோல
அடிப்படையெனும் அரசியல்
அறத்தோடு செயல்பட்டால்
அதனைச் சார்ந்த எல்லா நிர்வாக
அமைப்புகளும் முறையாக இயங்கும்

அரசியலில் படிந்த கறைகளை
அகற்றுவதில் குடி மக்கள்
அனைவரும் அக்கறை உடையவராக
இருத்தல் வேண்டும்,
எல்லோரும் எல்லாமும் பெற்று
இல்லாதோரும் ஏற்றம் கண்டு
இன்புற்று வாழ உதவிட வேண்டும்

குற்றம் புரிந்தவரை தட்டிக்
கேட்கும் மனத்துணிச்சல்
வோட்டுக்கு பணம் வாங்கி
போட்டவருக்குண்டா?
ஊழல் செய்வதில்லையென
ஒவ்வொருவரும் உறுதி கொண்டால்
வீடும், நாடும்  வளம் பெறும்