சனி, 10 ஆகஸ்ட், 2019

தரமானதா?




பாமர ஏழை மீது
பாசம் காட்டும் சாலை ஓரம்
படுக்க இடம் கொடுத்து
புண்ணியம் தேடிக்கொள்ளும்,
சுதந்திர நாடென்றாலும்
உறங்கக் கூட சுடலை தானே!

பட்டினியின் துயராலே
பொணமாகி படுத்த அன்னை,
புதைக்க பணமிருக்காதே என
பெற்ற பிள்ளைக்குக்
கற்று கொடுத்தாளோ !—பெண்களின்
கழுத்து செயினை அறுக்க

மூவாயிரம் ஆண்டுகளுக்கு
முன் வாழ்ந்தவர்கள் நாம் என்று
மார் தட்டிக் கொண்டாலும்
மனித உயிர்கள் மலிவுப் பதிப்பல்ல,
பட்டப்பகலில் நட்ட நடு வீதியில்
வெட்டி சாய்ப்பது விவேகமா? இல்லை
வெட்கக்கேடா ?

இறைவனும், இயற்கையும்
இருப்பதோ ஒன்றுபோல
இருந்தும் நாட்டு நடப்பாட்டம்
உயிர்களைக் காக்காம
ஒன்றை ஒன்று குறை கூறி
தப்பிக்க நினைப்பது
தரமானதா? இல்லை தவறானதா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக