சனி, 19 அக்டோபர், 2019

அறியாத ஒற்றுமைகள்




கந்தப் பெருமானின் வாகனம்
கானகத்து மயிலாகும்
அதன் காலடியில் ஒரு
அரவம் கண்டேன்,
அதுபோல அவனது தந்தை
சிவப்பெருமானின் கழுத்திலும்
ஸர்ப்பம் ஒன்று கண்டேன்

அமுதத்தை பிறருக்கு தந்து
ஆலகால விஷமருந்திய
சிவப்பெருமானின் கழுத்தில்
நீல நிறம் கண்டேன்,
சிறகை விரித்தாடும்
அழகு மயிலின் கழுத்திலும்
நீல வண்ணம் கண்டேன்

பறவை இன மயிலுக்கு
படைத்தவன் அருளிய வரம்
பின்புறத் தோகை
ஒளி வட்டம்போலக் கண்டேன்,
ஓம் எனும் மந்திர வார்த்தை
ஒளி வட்டமாக சிவனிடம்
அமையக் கண்டேன்

கைலையில் சிவபெருமான்
காலைத்தூக்கி நடனம்
ஆடக் கண்டேன் ,
அதுபோல தோகை விரித்து
அழகு மயிலும் ஆடக் கண்டேன்
அனைத்தும் அற்புதங்கள்
அறியாத ஒற்றுமைகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக