வியாழன், 26 ஏப்ரல், 2018

வெறுதே பறித்ததற்காக




இறைவனின் திருநாமத்தை
இடைவிடாது உச்சரிக்கும்
பெரியவர் சாமினாதன்ஒரு
பெரும் சிவபக்தர்,
விடியலுக்குமுன் தினமும் எழுந்து
விநாயகரை வழிபட்டுத் திரும்பும் வரை
காவி உடையில் காட்சி தரும்
கடவுள் பக்தர்

மளிகை சாமான்கள் விற்கும்
மொத்த வியாபாரம்
பெரியவருடையதுதான்
பெரும் செல்வந்தர்,
வெளியில் இவர் நடந்து சென்றால்
வருவோர், போவோரெல்லாம்
வணக்கம் சொல்லி வணங்குவர்
வணங்கி, வாழ்த்துவார் பதிலுக்கு

தெய்வத்தை நம்பினார்மக்களையும்
தெய்வமாகக் கருதினார்
இறை பணிக்கு அள்ளிக் கொடுத்தார்
இல்லாதவருக்கும் தந்து உதவினார்,
ஆலயம் சென்று விநாயகரை வழிபட
ஆட்டோ ரிக்சாவைத் தேடிஒருநாள்
அருகிலுள்ள பேருந்து நிலையத்தில்
காத்திருந்தார்

அப்போது மரத்தடியில்  உள்ள சாமிக்கு
அர்ச்சனை பொருட்களோடு
காவி உடை தரித்துத் திருநீரு பூசி
கடவுளை வழிபட ரிக்ஷாகார பக்தர்கள்
பீடி குடித்ததையும்
பேசக்கூடாததை பேசியதையும்
கவணித்த பெரியவர், மனம் வருந்தி
கடவுளுக்கு அடுக்குமாஎன்றார்

மறுநாள் வீடுதேடி வந்த பக்தர்கள்
மன்னித்தருள வேண்டினார்கள்,
பெரியவர் வேண்டா வெறுப்போடு
ஏற்றுக்கொண்டு, சொன்னார்
தெய்வ நம்பிக்கையை
தலையில் தூக்கி வச்சுட்டா
அதற்கு ஏற்றாற்போல் தான்
இருக்கனும்என்றார்

பிள்ளையாருக்கு பெருவிழா
பங்குனித் திருவிழா வந்தது
செலவுகள் அனைத்தையும்
பெரியவரே ஏற்று நடத்தினார்,
பூஜையை முடித்து பூசாரி
பக்தகோடிகளுக்கு
அன்னதானம் வழங்கியபோது
அதை ஏற்க மறுத்தனர்

அன்னதான சோற்றில்
அதிகம் கல்லும், மண்ணும்
இருந்தது தான் காரணமென
அறிந்த பெரியவர் நிலைகுலைந்தார்
சரிந்து விழுந்து புலம்பினார்
உடல் நடுங்க, வாய் குழறியது
யாரோ செய்த பாவம்
இவரைக் கவ்வியது

அப்பதான் பெரியவர் உணர்ந்தார்
இறைவனது நம்பிக்கையை
சிரசில் தூக்கி வச்சா
அதற்கு ஏற்ப இருக்கனும் என்பதை,
கண்ணீர் வடித்தது இரு கண்களும்
கடவுளிடம் மன்னிப்பு கேட்க அல்லஒரு
பெரும் சிவபக்தரின் உயிரை
வெறுதே பறித்ததற்காக.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக