திங்கள், 30 ஏப்ரல், 2018

கல்லாதது உலகளவு




கொடுத்தவன்
எடுத்துக்கொள்வது இயல்பு
இறைவனே யானாலும்
அதுதான் நியதி,
எடுத்துக்கொண்டது
இறைவன் என்றால்
பாவ புண்ணியம் பற்றி
பேசுவார்கள் பாமர மக்கள்

தந்ததை தரமறுப்பவனின்
தலையெடுக்க துணியும் மனிதனுக்கு
பகையும், பணமும்
பாவத்தை சுமக்க வைக்கும்,,
உடல் துறந்த உயிர்
உறவுகளை விட்டு போவதெங்கே?
எடுத்து சொல்ல
எவருண்டு பூவுலகில்?

சிறுமியொருத்தித் துறவி ஒருவரிடம்
இதையே தான் கேட்டாள்
அவருக்கு தெரியாதென
அச்சிறுமியை சொல்ல சொன்னார்,
“இடுகாடு செல்லும் பிணத்தோடு
  கூட வரும் கூட்டத்தை வைத்து
  கூறமுடியும் என்றாள்’’
துறவி  அதனை ஏற்றுக் கொண்டார்

அறியாத சிறுமியிடம்
அறிவு பிச்சை  கேட்டு
விடை தந்த சிறுமியிடம்
வெட்கி தலைகுனிந்தார் துறவி,
கதையென்றாலும் கருத்து உண்டு
கற்றது கைமண்ணளவு
கல்லாதது உலகளவு
அதுதான் அநுபவம் என்பது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக