சனி, 20 அக்டோபர், 2018

இறந்தவரை மீட்குமா?



வாழ்விழந்த விவசாயம்
வாழவைக்குமா உயிர்களை?,
நாளும் ஒரு மரணம்
நாளைய நிலையை கூறும்,
வறுமையில் வாடும் ஊரு
வயிற்றுக்கு நாளும் வழி தேடி
வேதனையுறும் மக்கள்

அங்கு வாழ்ந்தவர்களில்
ஆண்டியப்பனும் ஒருவர்,
இனிமையாகப் பழகுவார்மனைவி
இறந்துவிட்டார்
அம்மாவும், ஒரே மகளும்
அவரோடு வாழ்ந்தார்கள்,
அவரையும் வறுமை விடவில்லை

பெண்ணோ பூனை ஒன்றை
செல்லமாக வளர்த்தாள்,
பெண்ணுக்கு துணையானது
எல்லோரிடமும் பூனையும்
அன்பு காட்டியது,
காலம் கணிய பூனை
குட்டிகள் ஈன்றது

வளரும் குட்டிகள்
வீட்டில் அங்குமிங்கும் ஓடி
அக்கம்பக்க வீடுகளிலும்
அடியெடுத்துவைத்தன,
குட்டிகளின் சேட்டைகளும்
கும்மாளங்களும்பாட்டிக்குக்
கோபத்தைத் தந்தன

பேத்தி வருத்தமுற்றாலும்
வேறு வழியின்றி
ஊருக்குவெளியிலுள்ள
புதர்களில் விட்டுவிட எண்ணி,
பூனை வீட்டில் இல்லாதபோது
பூனைக்குட்டிகள்
புதர்களில் விடப்பட்டன

வீட்டுக்கு வந்ததும் பூனை
குட்டிகளைக் காணாது
வேதனையில் துடித்தது,
அங்குமிங்கும் அலைந்து
வருந்திக் கத்தியது,
தாய்மையின் வேதனை
தாய்க்குத்தான்  புரியும்

யாரைப் பார்த்தாலும் பூனை
சீறத் தொடங்கியது
பாட்டியின் சேலையை கால்களால்
பதம் பார்த்தது,
பாட்டி சீற்றம் கொண்டாள்
பூனையை துடைப்பத்தால்
முகத்தில் அடித்தாள்

அவமானமெனக் கருதியதோ
இல்லை அடிபட்ட வலியோ
சீறவுமில்லைபூனை
கத்தவுமில்லை,
கொல்லையிலுள்ள ஒரு மரத்தின்
உச்சியில் ஏறி அமர்ந்து கொண்டது
மூன்று நாட்கள் யாரும் அறியவில்லை


பட்டினியாலும்
பூனையின் வைராக்கியத்தாலும்
மரத்திலிருந்து கீழே விழுந்தது
மரணத்தைத் தழுவியது,
வீட்டிலுள்ளோர் அழுதனர்
இழந்தவர் அழுகை
இறந்தவரை மீட்குமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக