ஞாயிறு, 7 அக்டோபர், 2018

தங்கவில்லையே!




காவிரி ஆற்றின் சுவடு
காணாமல் போனாலும்
இளந்தென்றல் காற்றும்
கிணற்று நீரும் இன்றும்
கிராமத்து சனங்களைக்
கைகொடுத்துக் காக்கும்

காவிரி போலில்லாமல்
கருணையுள்ள நெஞ்சம்,
அள்ள அள்ளக் குறையா
அட்சய பாத்திரம் போல_ ஒரு
ஏழை ஆசிரியரின் உதவும் பண்பு
ஏது சொன்னாலும் குறையாது

எல்லாக் குழந்தைகளும்
மேன்மையுற,
ஏற்றம் தரும் கல்விதனை
கற்றுக் கொடுக்க
கல்விக்கூடம் கட்டிதர
கையேந்தினார் பண்ணையாரிடம்

ஏழைகளும் சேர்ந்து படிப்பர்
என்று கூறிஆசிரியரின்
எண்ணத்தை விட்டுவிடச்
சொன்னார் பண்ணையார்,
அசராத ஆசிரியர் அரசை நாடி
அறிவுக்கு வித்திட்டார்

ஓடும் நாளில் ஒரு நாள்
மாடுமேய்க்க பண்ணைக்கு
சிறார்கள் போகாததால்
சினம் கொண்டார் பண்ணையார்,
பசையுள்ள பக்கம் மக்கள்
பரிதாப நிலையில் ஆசிரியர்

காலமுழுதும் நாம் காத்திருந்தும்
கண்டுகொள்ளாத காவிரி
கடலோடு கலந்து வீனானதுபோல்
ஊராரின் தொல்லையால் ஆசிரியரை
ஊரைவிட்டு விரட்டியது
வெட்கக்கேடுஇப்போதெல்லாம்
தங்க விக்ரகங்களே  தங்கவில்லையே !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக