புதன், 1 அக்டோபர், 2014

எப்போதும் இப்படித்தான்.


எங்கும் அலையாமல்

தெருவோரம் அமர்ந்து

காலமெல்லாம் கையேந்தி

காசு வாங்கி வாழ்ந்தவரின்

உயிர் ஒருநாள் பிரிந்துவிட

 

உயிரற்ற உடலுக்கு

உறவென்று யாருமில்லை

படைத்த இறைவனுக்கு

பந்தமில்லாமலா?

பூமாதேவி சொந்தமானாள்

 

ஒரு தீங்கும் செய்யாத

அவனோட நினைவாக

ஊரு மக்கள் ஒன்றுகூடி

உருவச்சிலை எழுப்ப—அவன்

அமர்ந்திருந்த இடத்தில் தோண்ட

 

என்ன ஆச்சரியம்

எண்ணிக்கையில் அடங்காத

பொன்னும் மணியும்

பொருளும் செல்வமும் நிறைந்த

ஒரு புதையல் கிடைத்திட

 

ஊர்மக்கள் சொன்னார்கள்

“ இறைவனின் அருளும்

நல்லோர்களின் வாழ்வும்

நலம் பெறாமல் பாழாய்ப் போவது

எப்போதும் இப்படித்தான்.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக