ஞாயிறு, 2 நவம்பர், 2014

நாறித்தான் போகிறது.


பூப்பூக்கும் சோலையிலே

பூவாய்ப் பிறப்பெடுத்துத்

துளிர்க்கின்ற அரும்பொன்று

 

செடியோடக் காம்புதனை

சரியாகப் பிடித்து வாழ

அறியாத இளம் பருவம்

 

மனங்கவர் மணத்தையோ

மகரந்தத்தையோக் காணாத

சின்னஞ்சிறு அரும்பு அது

 

காட்டு முள்ளொன்று

காலில் தைத்துக்

கண்கலங்க வைத்ததுபோல்

 

கசக்கி சீரழித்த—அந்தக்

கொழுப்பெடுத்த வண்டுதனைத்

துண்டாட வேண்டாமோ?

 

சனநாயக நாட்டில்

பெருமையுற்று வீற்றிருக்கும்

தனிமனித சுதந்திரத்தால்

 

நடக்கும் செயலெல்லாம்

நாட்டையே உலுக்கினாலும்—நாடு

நாறித்தான் போகிறது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக