செவ்வாய், 2 டிசம்பர், 2014

யாருக்கு? எனக்குமா?


கடன் பட்டு பயிரிட்டு

துளிர் விட்டு எழும் பயிரை

மழைவெள்ளம் தலை சாய்க்க

பச்சிளம் சிசுபோல

பார்த்து பார்த்து

வளர்த்த பயிர்

கண்ணெதிரே மடிவதை

கண்டு மனம் கலங்கையிலே

 

ஆறுதல் கூறுவது போல்

வெள்ளநீரு

காவிரியில் ஓடிவந்து

கார்த்திகையில் நீராடி

கடவுளை வழிபட்டால்

கங்கையில் குளித்த

புண்ணியமும்

செல்வமும் பெருகுமாம்.

 

யாருக்கு? எனக்குமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக