செவ்வாய், 2 டிசம்பர், 2014

பெருமை தானே!


காலைப் பொழுது

மக்களைக் காக்க

பகலவன் பவனிவந்து

பணிபுரியும் வேளையில்

உன்னைக் கண்டபோது

 

சந்தைக்கு வந்த பொருள்

விலைபோக

நீட்டி பெருக்கி

பெருமை சேர்க்கும் உன்னை

வணிகனெனக் கூறவா?

 

மணமகளைத்

தேடும்போது

பெண்ணின் பெருமையை

மிகைபடுத்தி பேசும் உன்னை

தரகனெனக் கூறவா?

 

கைவிடாத

நல்ல நட்பு போல்

எப்போதும்

துணையாய் வரும் உன்னை

நண்பனெனக் கூறவா?

 

நீருக்கும் நெருப்புக்கும்

அஞ்சாமல் வாழும் நீ

ஒரு அதிசயம் தான்

என்பதால்—உன்னை

வீரனென்று கூறவா?

 

நீ இருளில் மறைந்தாலும்

ஒற்றை நிறத்தால்

உலக மக்களை சமமாக்கி

ஒற்றுமைபடுத்தும் உன்னை

நிழலென்றால் பெருமை தானே!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக