புதன், 4 ஜூலை, 2018

இயற்கை தந்த வரம்




அன்புக்கு இறைவன்
அன்னையை படைத்ததுபோல்
இயற்கை தந்த வரம் இதயம்
தியாகத்தின் திரு உரு,
பொறுப்பு தனை உணர்ந்து
பிறப்பு முதல் இறப்பு வரை
ஓய்வின்றி உழைக்கும் அது
உடலுக்கு உயிர் நாடி

தூய்மையான இதயம்
தேவனை தரிசிக்கும்
இல்லையென்றால்
இலங்கை வேந்தன்
இராவணனைப் போல்
வேதனைப்படும்,
அன்புள்ள இதயம்
அடுத்தவரின் துயர் போக்கும்

கடின இதயம் கொண்டவனை
கடவுளும் ஏற்பதில்லை,
நல்ல இதயம்
நமக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல
நீண்ட வாழ்வையும் தரும்,
இனிமையான இதயம்
அனைவரையும் ஈர்க்கும்
அரிய மருந்தாகி நம்மையும் காக்கும்

இதயமும், மூளையும்
இணையில்லா நண்பர்கள்
என்றாலும்இதயம்
மூளையை முடக்கிவிடும்,
முட்டாளின் இதயம்
அவனது வாயில் உளளது,
அறிவாளியின்  வாய்
அவன் இதயத்தில் இருக்கிறது

இதயத்தின் துடிப்பு
பிறந்த குழந்தைக்கு 135 தடவை
நடுத்தர மனிதருக்கு 72 தடவை
முதியோர்க்கு 95 தடவைகளாம்,
இதனை வைத்து தான்
ஆங்கிலேயக் கவிஞர் ஒருவர்
முதியவர்கள் மீண்டும்
குழந்தையாய் மாறுகிறார்களென்று
கூறினாரோ!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக