வியாழன், 1 அக்டோபர், 2020

வாழ்வில் ஏற்றம் தரும்

 

ஒரு மனிதன் உட்காருவது

அவனுக்கு சாதாரண செயல் ,

ஆனால் யோகிகளுக்கு

அது உயர்வு தரும் செயல் ,

உட்கார்ந்து தியானம் செய்து

உயர்ந்த ஞானத்தை பெற்றிட

அவர்கள் எடுக்கும் மரபு அது,

போதி மரத்தடியில் அமர்ந்து

புத்தர் பெருமானும் ஞானம்

பெற்றதும் இப்படித்தான்

 

எழுந்து நிற்கிற செயலும்

எல்லா மனிதருக்கும்

சாதாரண செயல் தான்அதே

செயல் தவழுகின்ற குழந்தைக்கு

பெரியதொரு சாதனை ,

அற்பச் செயலென்று சொல்லுகிற

சாதாரண செயலும்

சிலருக்கு உயர்ந்த செயலாகும் ,

செய்வன திருந்தச் செய்தால்,

எந்த செயலும் வாழ்வில்

ஏற்றம் தரும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக