ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

மனித மூளை இருக்கா ?




காலில் தைத்த முள்
கண்களை கலங்க வைக்கும்
கண்ணில் குத்தியதுபோல்
கண்ணீரை சிந்தவைக்கும்

காக்கும் பற்களிடம்
கடிபடும் நாக்கால்
ஆவென திறக்கும் வாய்
அபயக்குரலெழுப்பும்

மூச்சுவிட முயற்சித்தும்
முடியாத நுரையீரலால்
மொத்த உடலும் துடிக்கும்
முகம் துவண்டு வாடிவிடும்

ஏதோ ஒரு உறுப்பு
இடர் படும்போது
வேறு உறுப்புகளும்
வேதனையை வெளிபடுத்தும்

மாற்று உறுப்பு சிகிச்சை
மற்றொன்றை பொருத்தி
மனத்துயரை போக்கும்இது
மருத்துவத்தின் மகிமை

மூளையை அதுபோல
மாற்ற முடியாதாம்,
பழி ஒரு பக்கம்
பாவம் ஒரு பக்கம் போகுமாம்

மாற்ற முடிந்தால்
மாசு படாமலும்
மனித நேயத்தோடு
மனசாட்சிக்கு மதிப்பு தரும்
மனித மூளை இருக்கா இங்கு?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக