வியாழன், 8 மே, 2014

காவிரி ஆறு


காவிரி ஆறே
தமிழ் மண்ணின்
நைல் நதியே!
சோழ நாட்டு
முறைப் பெண்ணாய்
சுற்றி சுற்றி வந்தவளே!

ஏது குறை உனக்கு?
பிறந்தவீட்டு சிறையா? இல்லை
புகுந்தவீட்டு குறையா?
வழிமாறி போனதேனடி?
இருந்தும்
பருவத்தில் ஓடிவந்து
அள்ளி அணைப்பதேனடி?

ஓடிவந்து முகம் காட்டி
மறைவதேனடி?
கண்ணாமூச்சி ஆட்டம்
உனக்கெதுக்கடி?
காயவிட்ட நினைவுகளை
இங்கு வந்து
ஈரமாக்கேன்டி!

என் ம‌ன‌ம் மெளன‌மாய்
உன் வ‌ர‌வையெண்ணி
நித்த‌ம் நித்த‌ம்
இர‌த்த‌ம் சிந்துத‌டி!
வ‌ழிமேல் விழி வைத்து
காத்திருந்தும்

நீ ஓடுகிறாய், பாய்கிறாய்
சுழ‌ல்கிறாய்,
ந‌ட‌க்கிறாய், தேங்குகிறாய்
எல்லாமும்
நாடாளும‌ன்ற‌த்தில் தான‌டி!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக