வியாழன், 9 ஜூன், 2016

மக்களை அழித்துவிடும்.


அன்று தாராளமாய்த் தண்ணீர் கிடைக்கையிலே
பணவரத்து குறையலாச்சு
இன்று பணப்புழக்கம் அதிகமாப் போகையிலே
நீரோ குடிக்கக்கூட கிடைப்பதில்லை

உயிர் வாழ தண்ணீரு முக்கியமாவதுபோல்
பண்டமாற்றுக்கு பணம் அவசியம்
மனித வாழ்க்கையில் உடலும், உயிரும்
இன்றியமையாத்தைப்போல் பணமும், நீரும்

கருப்புப் பணத்தாலும்
கலக்கும் சாக்கடை தண்ணீராலும்
சமுதாயம் அதிகம் கெடலாச்சு,
ஒற்றை மனிதனாலும் பணம் களவாடப்படும்
கூட்டமாய்க் குரல் கொடுத்தாலும் நீர் கிடைக்காது

பணமும் நீரும்
சாதி, மதம், அரசன், ஆண்டியென
வேற்றுமை பார்க்காது--ஆனால்
பஞ்ச பூதங்கள் போல் இவையிரண்டும்
மனிதர்களைக் கொன்று குவித்துவிடும்

தண்ணீரால் தாவரம் வளர்வது இயற்கை
பணத்துக்காக தாவரம் வெட்டப்படுவது செயற்கை
நீரும் பணமும் இல்லையென்றால்
மானுடமென்ன மண்ணுலகே இயங்காது

இரண்டும் எல்லை மீறாதவரை
நிம்மதியாய் வாழும் மக்கள்
இறைவனாய் வணங்கி வழிபடுவர்,
இவையிரண்டும் அதிகமானால்

மக்களை அழித்துவிடும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக