வியாழன், 9 ஜூன், 2016

சொல்ல முடியுமா?

தாவரம்
தரணி வாழ் உயிர்களுக்கு
தெய்வம்
தந்த வரம்

மண் அரிப்பை தடுத்து
நீரை சேமிக்க உதவியதை,
காற்றையும் நீரையும்
சுத்தமாக்கியதை,

உணவு தந்து
உயிர் காத்ததை,
நிழல் தந்து
வெப்பம் தணித்ததை,

போக்குவரத்துக்கு உதவி
பணம் தந்து காத்ததை,
வனவிலங்குகளுக்கு
வாழ்விடம் அளித்ததை,

மண்ணின் மாந்தர்கள்
மரங்களின் உதவிகளை
மனதார போற்றி
பெருமை படுத்தாமல்

வளர்ந்து நிற்கும் மரத்தை
வெட்டி சாய்த்து
விளைநிலத்தை வீதியாக்கி
வீடு கட்டியதும்

படுத்துறங்க
படுக்கையாக்கி,
வேலிக்குக் காலாக்கி
விதவிதமா பலனடைந்தும்

மரணமுற்ற மனிதனுக்கு
பாடையானதும்,
பிணத்தை எரியூட்ட
மரம் உதவியதையும்

மனிதமனம் உணர்ந்து
மரத்துக்கு நன்றி கூறினாலும்,
மனிதனால் சொல்லமுடியுமா
இயற்கையைக் காப்போமென்று!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக