புதன், 13 செப்டம்பர், 2017

வலி விலகும், வாழ்வு சிறக்கும்.




உடல் நோயும், பயமும்
உடன் பிறந்தவை
அழையா விருந்தினர்போல
அவ்வப்போது வந்துபோகும்
ஒட்டி உறவாடும்
மொத்தமா விட்டுவிலகாது

தரும் இடர்பாடுகள்
தேகத்தை நோகடிக்கும்
வலியை உண்டாக்கும்,
வலியோ
வலிமையை உருவாக்கும்
வலிமை வலியை விரட்டும்

ஏது பொருள்மீதும்
அதீத பற்று வைத்தால்
பாதுகாக்க முடியுமாவென
பற்றிக்கொள்ளும் பயம்
பாய் விரித்து அமரும்—மனதை
பலவீன படுத்தும்

பயத்தை போக்க
பாய்ந்து வரும் துணிவு
பய உணர்வை அகற்றும்
மன வலியை போக்கும்—சிலசமயம்
உணர்ச்சிக்கு அடிமையாகி
ஊறும் விளைவிக்கும்

திறமை இருந்தால்
துணிவு தானே வரும்
தெளிவு இருந்தால்
நிதானம் கூட வரும்,
துணிவுக்கு நிதானம்
தோள் கொடுக்கும்
வலி விலகும், வாழ்வு சிறக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக