ஞாயிறு, 1 மார்ச், 2020

உழைத்து உண்ணும் பண்பு




ஆற்றுக்குக் குதிரையை
அழைத்து செல்லலாம்
அனைவரும் சேர்ந்து முயன்றாலும்
அதனை நீர் அருந்த செய்வது
இயலாத காரியம்,
அதுபோலத்தான்
இன்றைய இளைஞர்கள்

பூனைக்கு மீனைத் தின்ன
பெரிதும் ஆசை,
அதற்காக தண்ணீரில்
இறங்கி மீனை பிடிக்க
அது விரும்பாது—ஆனால்
கரையிலிட்ட மீனை
களவாடித் தின்னும்

இன்றைய சமூகத்தில்
இப்படிப்பட்ட இளைஞர்கள்
முயற்சி செய்து
முன்னுக்கு வர விரும்பாமல்
பிறர் சம்பாதித்த பணத்தில்
தின்று உயிர் வாழ்பவர்கள்
தடம் மாறிப்போகிறார்கள்

வெளியே சென்று புல்
மேய்ந்து வரும் மாடுகள் கூட
பாரமான வண்டி இழுத்து
பசி போக்கி உயிர் வாழும்,
மாந்தரை விட விலங்குகளின்
உழைத்து உண்ணும் பண்பு
உயர்வானது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக