செவ்வாய், 1 செப்டம்பர், 2015

காக்கைக்கு ஒரு காலமோ!

காலத்தின் கோலத்தால்
காடெல்லாம் அழிந்து
கான்கிரிட் வீடாகிப்போன—அந்த
பட்டணத்து வாழ்க்கையிலே

காலைக் கருக்கலில்
கூவிக் குரலெழுப்பி
குடும்பத்தையே விழிக்கவைக்கும்
சேவற்கோழியைக் கண்டதுண்டோ!

சென்னை மாநகரில்
சற்றேக் கூவும் குயிலும்
எப்போதும் இசைக்காதபோது,
எழுகின்ற இளஞ்சூரியனை—மக்கள்
எப்படிக் காண்பாரோ!

ஊருக்கு வெளியில் தங்கி
விடிந்தபின் வந்துசேரும்
காக்கைக் கரைந்து—மக்களுக்குக்
காலைப்பொழுது புலருவது
வேடிக்கையென்றாலும்

காக்கைக்கு ஒரு காலமோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக