ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

பாதை புலப்படும்




தன்னம்பிக்கை இல்லாது
தைரியமேது?
தைரியமில்லாது
போட்டி ஏது?
போட்டி இல்லாது
புகழேது?
புகழில்லாது
வாழ்வேது?
வாழ்வில் தோல்வி இல்லாது
வெற்றி ஏது?
வெற்றி, தோல்வியின்றி
மானுடமேது?
மானுடம் இல்லாது
புவியேது?
புவியில் நடக்கும்
போட்டியில் தான்
பலவீனம் அறியப்படும்
பலவீனத்தைக் கலைய

பாதை புலப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக