செவ்வாய், 8 செப்டம்பர், 2015

மனிதருக்கு உண்டோ?

காட்டு ராஜாவின்
வாழ்க்கை—ருமேனிய
நாட்டு மக்களோடு

அடக்கப்பட்டு, பழக்கப்பட்டு
கூண்டில் வாழும் சிங்கம்
புகழ் பெற்றது சர்க்கசில்

சாகசங்கள் செய்து
பார்வையாளரை
பரவசப்படுத்துவது வேலை

யானைக்கும்
அடி சறுக்குமெனக்
கூறுவதுபோல்

ஒரு நாள்
இடறி விழுந்து சிங்கம்
தவறு செய்துவிட

பயிற்சியாளர்
பார்வையாலும், சொற்களாலும்
கோபத்தை வெளி காட்ட

சிங்கமும் சினம் கொண்டு
அவளைக் கடித்துத் தள்ள
இறந்துபோனாள்

அதிர்ச்சியுற்ற சிங்கம்
அவள் அருகிலேயே
படுத்துவிட்டது

சாப்பிட மறுத்து
பட்டினி கிடந்தே
உயிரை விட்டது

தவறை உணர்ந்து
தண்டனையை
தனக்கே தந்து கொண்டது

மிருகத்துக்குக் கூட
மனசாட்சி உண்டு—ஆறறிவு

மனிதருக்குண்டோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக