வியாழன், 3 செப்டம்பர், 2015

பாவம் ஏழை உயிர்

பாரதப் போரின் பதினேழாம் நாள்
கணை துளைத்து நிலை குலைந்த
கர்ணனைப்போல்
சரியும் இந்திய இறையாண்மை

அணு அணுவாய் உயிர் பிரியும்
குந்தி தேவியின் பிள்ளைபோல்
ஒவ்வொரு நொடியும்
செத்து மடியும் ஒருமைப்பாடு

பாரதப் போரில் மடிந்த
அப்பாவி மக்கள் போல்
இன்றும் வறுமையில் வாடி
மரணப்படும் ஏழைகள்

இந்திய தேசம் விட்டு
இடமாறி வெளிநாட்டில்
வாசம் செய்யும் பெருஞ்செல்வம்
வந்து உதவாதோ!

கருமையெனக் கூறினாலும்
வறுமைக்கு பாவமில்லை
வராமப்போனாத்தான்

பாவம் ஏழை உயிர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக