ஞாயிறு, 4 ஜனவரி, 2015

பெண்மையின் அழகு.


இதயத்தை ஈர்க்கும்

பெண்மையின் அழகு

இயற்கையின் சீதனம்

 

காதலை வரவழைக்கும்

வந்தபின்னே—அழகு

தன்னை இழக்கும்

 

நாணம் பெண்ணுக்கும்

நாணயம் ஆணுக்கும்

அழகு சேர்க்கும்

 

மதுவைக்காட்டிலும்

மயக்கம் தரும்--அழகு

மங்கையரின் சிரிப்பு

 

அழகு

சாதி,மதங்களை

அறியாது

 

அழகு பெண்

அடுத்தவளை

அழகென ஏற்கமறுப்பாள்

 

இரசிக்கும் இதயம்

வசிக்கும் நீண்டு

முதுமையடையாமல்

 

அழகும், கண்ணீரும்

ஆற்றல் மிக்கது

சாதிக்க வல்லது

 

பெண்களின் அழகு

ஏற்றி வைத்ததுமுண்டு

இறக்கி அழித்ததுமுண்டு

 

எதுவானாலும்

பெண்மையை படைத்த

ஆண்டவனும் அழகுதான்

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக