வியாழன், 8 ஜனவரி, 2015

தனிமை


 
 
 
முதுமையில் தனிமையை
முழுமையாய் ஏற்றால்
இறைவனைப்போல்—முதுமையும்
மரியாதை பெறும்
 
நோயெல்லாம் கூடி
ஓரிடத்தில் உன்னோடு
துணையாய் நிற்கையிலே
தனிமையெனக் கூறலாமோ!
 
இறைவன் தனித்தவன்
அவனால் தானே
இவ்வையகம் காக்கப்படுவதாய்
இதிகாசம் சொல்லலையா!
 
இயக்குவது ஒருமை
அழிவில்லாதது,
இயங்குவதெல்லாம் பன்மை
அழியக்கூடியது, தெரியுமா!
 
நீர், நிலம், காற்று
நெருப்பு, ஆகாயம் எனும்
ஐம்புலன்களும் தனித்தவை
ஆட்டிப்படைப்பவை, அழியாதவை
 
தனிமையை
வெறுக்காதீர்கள்
தனிமையில் அமர்ந்தால்
கவிதையும் கைகோர்க்கும்
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக