திங்கள், 16 நவம்பர், 2015

வயிறு பத்தி எரியுது



தூறலில் தூதுவிடும்
மழை நீர்
மண்ணை முத்தமிட்டு
மண்ணும், நீரும்
மணம் பரப்பியதுண்டு

பருவ மழைக்கு
பருவக் கோளாறோ!
முத்தம் மறந்து
கட்டி அணத்ததால்
ஊரே நாறிப்போனது

இறங்கி வரும்
சாரல் மழை கூட
இசைபோல ஓசையெழுப்பி
செவிகளை
மகிழ்ச்சியில் நனைத்ததுண்டு

பேய் மழையாய்
பெய்த நீ
பறித்த உயிர்களால்
ஓலச்சத்தம் தானே—ஊரெங்கும்
உறக்கக் கேட்குது

அருவி நீராய்
சிதறி விழுந்து
அள்ளித் தெளித்த இன்பத்தில்
இதயம்
துள்ளி குதித்ததுண்டு

பெரு வெள்ளமாய்
பெருக்கெடுத்து
அனைத்தையும் அழித்ததைக்
கண்டபோது
நெஞ்சு துடிக்குது

சிறு மழையாய்
சேர்த்த பெருமைகளை,
செழித்து வளரும்
உயிரும், பயிரும்
பறைசாற்றிக் கொண்டாலும்

சூறாவளியாய் வந்து
சுழன்றடித்துத் தமிழகத்தை
புரட்டி போட்டதை
பார்த்தபோது

வயிறு பத்தி எரியுது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக