வியாழன், 12 நவம்பர், 2015

மறக்குமா நெஞ்சம்!



வாகனம் பார்த்திராத
வனாந்திர பூமியில்
வசந்தகால தென்றல்போல
என் மறுவாழ்வு தொடக்கம்

மலையூரின் வாசம்
மனதைத் தொட்டாலும்
வயிறு நிறையாம
நோவு எழுந்து ஆடியதில்
வீசப்பட்டேன் ஊரை விட்டு

காலன் காத்திருக்க
கடுங்குளிரும் கைகோர்க்க
பாடை கட்டி
பரலோகம் போவதுபோல்
நாலு பேர் தூக்கி சுமக்க

காடு,மலை பாராது
காததூரம் நடந்து வந்து
மருத்துவமனை சேர்த்து
உயிர் பிச்சை தந்த சனத்தை
உயிர் இருக்கும் வரை
மறக்குமா நெஞ்சம்?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக